என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தார்த் மல்ஹோத்ரா"

    • நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் காதலித்து வந்தனர்.
    • இவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்றது.

    கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.


    கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா

    இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டினார். இந்நிலையில், காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.


    கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா

    ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கியாரா, "எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுளளார்.


    • கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
    • இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.

    இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டினார். இதையடுத்து, காதலர்களான நடிகை கியாரா அத்வானியும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.


    கியாரா அத்வானி  -சித்தார்த் மல்ஹோத்ரா

    ராஜஸ்தானின் சூர்யகிரக் மண்டபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில், கியாரா அத்வானி -சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு ஆர்.சி.15 படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    கியாரா அத்வானி, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்.சி.15' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார்.
    • தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.

    மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரிக்கும் ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

    தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்குகிறார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடிக்க உள்ளனர். இந்த படம் அடுத்த வரும் ஜூலை 25-வது ரிலீஸ் ஆகும்.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் இடம் பெற்றுள்ளார். இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    ஜான்வி கபூர் சமீபத்தில் ஜூனியர் என்.டி ஆர் நடித்த தேவரா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தற்பொழுது இப்படத்திலும் தென்னிந்திய பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை கியாரா அத்வானி விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.
    • கியாரா-சித்தார்த் தம்பதிகளுக்கு பல நடிகர், நடிகைகள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ்.தோனி, பரத் எனும் நான், கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'செர்ஷா' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் நடித்திருந்தார்.

    அப்போது, நடிகை கியாரா அத்வானிக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு காதல் ஏற்பட இருவரும் 2023-ம் ஆண்டு ஜெய்சால்மரில் திருமணம் செய்துகொண்டனர். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், திருமணமாகி 2 ஆண்டு கடந்த நிலையில் கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக, நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார். குழந்தைகளின் காலணிகளை பதிவிட்ட கியாரா, "எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு. விரைவில் வரவிருக்கிறது" என கூறியுள்ளார்.

    கியாரா-சித்தார்த் தம்பதிகளுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகை கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள்.
    • இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா ஆடம்பரமாக கொண்டாடி இருக்கிறார்.

     

    துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது காதலியின் பிறந்தநாளை, அவர் வியக்கும் அளவு பிரமாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வாழ்த்துகளை பெற்று வருகிறது. காதலர்களான இருவரும் திருமண வாழ்க்கையில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவீட்டாரும் திருமண பேச்சை தொடங்கி விட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

     

    தற்போது கியாரா அத்வானி, ராம் சரண் ஜோடியாக ஷங்கர் இயக்கி வரும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×