search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழியுமான சாலை"

    • வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • தார் சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம்-வேலூர் சாலையில் கூட்ரோடில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டில் கடந்த 26ம்தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற்றபோது, சிறிய சிமெண்ட் ஸ்லாப்கள் பெயர்த்து புதிய ஜல்லி அமைத்தும் தார் சாலை போடாமல் விட்டுள்ளனர்.

    இதனால் இவ்வழியே செல்லும் ஆம்புலன்ஸ் உள்பட இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே பராமரிப்பு பணி நடந்த இடத்தில் தார் சாலை அமைத்தால் மட்டுமே வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடியும் என ரெயில்வே துறையி னருக்கு தெரிந்ததே.

    ஆனால் தார் சாலை அமைக்கவில்லை என்பதால் ரெயில் தண்டவாளத்தில் பள்ளங்கள் அதிகமானது. இதனால் வாகனங்கள் தட்டுத் தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    உடனடியாக தண்டவா ளத்தில் ரெயில்வே துறையினர் தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் இருந்து நாகல்குழி செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது அந்த சாலை குண்டும், குழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் வெளியூர் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாற்று வழி இல்லாமல் ஒரே சாலையை பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து சாலை பழுதடைந்து வருகிறது.
    • துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க மத்திய ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 5.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 வார்டுகளிலும், 2 வருடங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஹள்ளி வரை உள்ள பெல்ரம்பட்டி செல்லும் நெடுஞ்சாலை குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டது.

    அந்த சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக மாறி, கற்கள் பெயர்ந்து, மண் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது.

    சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.மேலும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மாற்று வழி இல்லாமல் ஒரே சாலையை பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து சாலை பழுதடைந்து வருகிறது.

    பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×