search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவியல் பரிசோதனை"

    • 75 இடங்களில் 75 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
    • மாணவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    உடுமலை :

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம், அமிர்த விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், உடுமலையில் அனைத்து தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து 75 இடங்களில் 75 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக, சுதந்திர போராட்ட தலைவர்களை நினைவு கூறும் வகையிலும் மாணவர்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அந்த வரிசையில் கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் ஸ்ரீ விசாலாட்சி மகளிர் கலைக் கல்லூரி சார்பில், 75 பள்ளிகள், 75 மாணவர்கள், 75 நிமிடங்கள் என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் 75 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.தவிர வருகிற 8-ந்தேதி முதல் 15ந் தேதி வரை இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி, உடுமலை தேஜஸ் அரங்கில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட உள்ளது. இந்திய விஞ்ஞானிகள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் குறித்த பட கண்காட்சியும் இடம்பெறுகிறது.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்தியாவை 2047-ல் வல்லரசாக்க என் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி,கனவு இந்தியா 2047 என்ற தலைப்பில் ஓவியப் போட்டி,2047 ல் இந்தியாவை வல்லரசாக்க என் முழக்கம் என்ற தலைப்பில் ஸ்லோகன் எழுதுதல் போட்டியானது வருகிற 10-ந்தேதி மதியம் ம2ணிக்கு நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை 8778201926 என்ற செல்போன் எண் மற்றும் udt75eventsceleb@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.   

    ×