என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச செஸ் கூட்டமைப்பு"
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
- இந்திய செஸ் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தமிழக வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக அதிகாரப்பூர்வமாக ஆனார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754 புள்ளி) முந்தினார்.
இதன் மூலம் செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்படும் தர வரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து குகேஷ் முந்தி இருந்தால் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் சமீபத்தில் உலக கோப்பை செஸ் போட்டியில் கால்இறுதி வரை முன்னேறிய குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளர்.
இதன் மூலம் குகேஷ் 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை முந்தி அந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக பிடித்தார்.
உலக கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழகத்தின் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் 19-வது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளார்.
இந்திய செஸ் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தமிழக வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு.
- செஸ் விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.
இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் முதலமைச்சர் கூறியுள்ளதாவது:
புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் ஆகும்.
கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும். உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்க்கடி துவார்கோவிச்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுமுகமாக நடத்துவதில் அவரது பங்கு இன்றியமையாதது. தலைவராக அவரது முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததைப்போல இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை:
சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.
இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்