search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்துச்சண்டை போட்டி"

    • பாராட்டி பதக்கங்களை வழங்கினார்
    • 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றனர்

    அரக்கோணம்:

    செங்கல்பட்டில் கடந்த 5-ந் தேதி குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. குத்துச்சண்டை போட்டிக்கு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அரக்கோணம் அம்பேத்கர் பாக்சிங் கிளப் மாணவ மாணவிகள் 15 பேர் குத்துச்சண்டை பயிற்சியாளர் பிரேம்குமார் தலைமையில் கலந்து கொண்டனர். அப்போது போட்டியில் மாணவ மாணவிகள் 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.

    வெற்றி பெற்று ஊர் திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு அரக்கோணம் 6வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே.எம்.பி.பாபு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்து அவர்களை பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.

    • மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
    • குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.

    திருப்பூர்:

    வெள்ளக்கோவில் - கரூா் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ வா்ஷினி (16). குத்துச்சண்டைப் போட்டியில் ஆா்வமுள்ள இவா் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயிற்சி பெற்று வந்தாா்.

    திருப்பூா் ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற திருப்பூா் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தாா். இதையடுத்து மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றாா். மாணவி வா்ஷினிக்கு பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

    • சப் ஜூனியா் பிரிவில் திருப்பூா் அப்பு பாக்ஸிங் கிளப் அணியும் முதலிடம் பெற்றன.
    • திருப்பூா் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோா் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கம் சாா்பில் 3 நாள்கள் நடத்தப்பட்ட இப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் இருந்து 250 ஆண்கள், 100 பெண்கள் என மொத்தம் 350 போ் கலந்து கொண்டனா்.

    இதில் 4 கட்டங்களாக நடைபெற்ற போட்டியில் சீனியா் பிரிவில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அணி முதலிடமும், சீனியா் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அணியும், ஜூனியா் பிரிவில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிபிட் கிளப் அணி முதலிடமும், யூத் பிரிவில் எஸ்.ஐ.ஹெச் அணி முதலிடமும், சப் ஜூனியா் பிரிவில் திருப்பூா் அப்பு பாக்ஸிங் கிளப் அணியும் முதலிடம் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூா் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலரும், திருப்பூா் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோா் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினா்.

    இதில், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கத்தின் கவுரவ தலைவா் கருணாநிதி, சங்கத்தின் தலைவா் ராமகிருஷ்ணன், காங்கயம் தி.மு.க. நகரச் செயலா் வசந்தம் நா.சேமலையப்பன், நகர துணைச் செயலா் எம்.எஸ்.சுப்பிரமணியம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கத்தின் செயலா் பி.சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலா் பிரிதிவிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • சாதனை படைத்த மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    தருமபுரி,

    கரூர் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரண்டு நாட்கள் நடைபெற்றது.

    இந்த போட்டியில் தருமபுரி மாவட்ட மாணவிகள் உள்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பயிற்சியாளர்கள் குமார், கணேஷ் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த மல்லசமுத்திரத்தை சேர்ந்த, சக்திவேல்-புவனா மகள் சவுமியா ஸ்ரீ தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் தருமபுரி எஸ்.வி ரோடு பகுதியில் வசிக்கும் முருகன்-ரேவதி மகள்கள் தர்ஷினி வெள்ளிப்பதக்கமும், யாழினி வெண்கல பதக்கமும் வென்று தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • சுதந்திர தினத்தையொட்டி நடக்கிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வாழப்பந்தல் சாலையில் உள்ள குத்து சண்டை பயிற்சி பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரர்கள் சமீபத்தில் பஞ்சாப், ஹரியானா போன்ற இடங்களில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

    மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தன்று வாலாஜா மேல்நிலைப் பள்ளியில் குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது.

    அதை முன்னிட்டு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் அப்துல் அக்கீம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜா, பயிற்சியாளர்கள் கிருஷ்ணன், ரகு, கலவை தாசில்தார் ஷமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்

    ×