என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்வீர் கபூர்"

    • முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது.
    • ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் நீடா கலந்துகொண்டார்.

    அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி கலந்துகொண்டார்.

    அப்போது நடந்த கலந்துரையாடலில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது உலக பணக்காரர் பில் கேட்ஸ் அல்லது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஆகிய இருவரில் யாருடன் இரவு உணவு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த நீடா அம்பானி, "ரன்பீர், ஏனென்றால் என் மகன் ஆகாஷ் மிகவும் சந்தோஷப் படுவான்- ரன்வீர் ஆகாஷின் சிறந்த நண்பர்" என்று பதில் அளித்தார்.

     

    இதற்கு முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீடா, மோடி நாட்டுக்கு சிறந்தவர், முகேஷ் வீட்டுக்கு சிறந்தவர் என முத்தாய்ப்பாகப் பதில் கொடுத்தார். 

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


    பிரமாஸ்திரா

    இப்படத்தின் முதல் பாடல் "கேசரியா" அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் "தேவா தேவா" பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.

    "தேவா தேவா" பாடலின் அனுபவம் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது, "நான் பாடலை முழுமையாக ரசித்தேன், தனிப்பட்ட முறையில் பல நிலைகளில் அதை தொடர்புபடுத்த முடியும். இந்த பாடல் ஒருவரை ஆன்மீக ரீதியில் மிகவும் சக்திவாய்ந்ததாக உணர வைக்கிறது, மேலும் எல்லோரும் அதை உணர்ந்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்" என கூறினார். 

    ×