search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்மின்"

    • கார்மின் நிறுவனத்தின் புதிய இன்ஸ்டிண்ட் ஸ்மார்ட்வாட்ச் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புது கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.

    பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளரான கார்மின் இந்திய சந்தையில் புதிய இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது சீரிசில் - இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மற்றும் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசம், கிராஸ்ஒவர் சோலார் மாடல் சூரிய சக்தி கொண்டு சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    புதிய கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மாடலில் கார்மின் நிறுவனத்தின் அனைத்து உடல்நல அம்சங்கள், மேம்பட்ட ஸ்லீப் மாணிட்டரிங், ஸ்லீப் ஸ்கோர், ஹெல்த் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளது. இதன் சோலார் வேரியண்ட் 70 மணி நேரத்திற்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் அம்சங்கள்:

    புது ஸ்மார்ட்வாட்ச்களில் சூப்பர்-லூமி நோவா-கோட் செய்யப்பட்ட அனலாக் மற்றும் டஃப் டிசைன் உள்ளது. இத்துடன் அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஜிட்டல் டிஸ்ப்ளே, 10ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் லென்ஸ், தெர்மல் மற்றும் ஷாக் ரெசிஸ்டண்ட், MIL-STD-810 தரம் கொண்டுள்ளது. இதன் சோலார் எடிஷன் 70 நாட்கள் பேட்டரி லைஃப் கொண்டிருக்கிறது.

    கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் - ஸ்மார்ட்வாட்ச் மோடில் கிட்டத்தட்ட ஒரு மாதத்தற்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. ஜிபிஎஸ் மோடில் 110 மணி நேரத்திற்கும் அதிக பேட்டரி லைஃப் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லீப் ஸ்கோர், மேம்பட்ட ஸ்லீப் மாணிட்டரிங், ஹெல்த் மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    கார்மின் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மாடல் பிளாக் நிறத்திலும், இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் கிராஃபைட் சோலார் கிராபைட் நிறத்திலும் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 55 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 61 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை கார்மின் பிராண்ட் ஸ்டோர், ஹெலியோஸ் வாட்ச் ஸ்டோர், ஜஸ்ட் இன் டைம், ஸ்போர்ட்ஸ் ஸ்டோர், அமேசான், டாடா க்ளிக், டாடா லக்சரி, சினர்ஜைசர், ப்ளிப்கார்ட் மற்றும் நைகா வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    • கார்மின் நிறுவனம் இந்தியாவில் சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்து இருக்கிறது.
    • இந்த விற்பனையில் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கார்மின் நிறுவனம் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன் படி ஜிபிஎஸ் வசதி கொண்ட மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்கலுக்கு கார்மின் இந்தியா அதிகபட்சமாக ரூ. 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

    ஃபோர்-ரன்னர் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் ஓட்டப்பயிற்சி மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஓட்டப் பந்தய வீரர்கள், அத்லெட்களை மனதில் வைத்து இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கார்மின் ஃபோர்-ரன்னர் 955 மற்றும் ஃபோர்-ரன்னர் 255 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    சலுகை விவரங்கள்:

    கார்மின் ஃபோர்-ரன்னர் 45 லாவா ரெட் ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 12 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 45 பிளாக் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 13 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 745 பிளாக் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 745 மேக்மா ரெட் ரூ. 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 42 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் பிளாக் ரூ. 5 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 990

    கார்மின் ஃபோர்-ரன்னர் 245 மியுசிக் லாவா ரெட் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 29 ஆயிரத்து 990

    சுதந்திர தின சிறப்பு சலுகைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. கார்மின் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த சலுகையை விற்பனையை பயன்படுத்தி அத்தல் தள்ளுபடியை பெறலாம்.

    • கார்மின் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளின் போது பயன்படுத்த உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்-இன் அப்டேட் செய்யப்பட்ட மாடல் ஆகும்.

    கார்மின் நிறுவனம் கடந்த ஆண்டு எண்டியுரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மலை ஏறுதல், ஹைகிங் என சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளின் போது பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் அப்டேட் செய்யப்பட்ட புது மாடலை கார்மின் அறிமுகம் செய்து இருக்கிறது. கார்மின் எண்டியுரோ 2 பல்வேறு புது அம்சங்களை கொண்டுள்ளது.

    குறைந்த எடை கொண்ட டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் கார்மின் எண்டியுரோ 2 டச் ஸ்கிரீன் மற்றும் சஃபயர் லென்ஸ் பாதுகாப்பு, நைலான் பேண்ட் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரி லைஃப்-ஐ ஜிபிஎஸ் மோடில் 150 மணி நேரம் வரை அதிகரித்துக் கொள்ளலாம். இதில் சன் சார்ஜிங் மற்றும் SatIQ தொழில்நுட்பம் உள்ளது. இது ஸ்மார்ட்வாட்ச் மோடில் அதிகபட்சம் 46 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


    எண்டியுரோ 2 மாடலில் பில்ட்-இன் எல்இடி பிளாஷ்லைட் உள்ளது. இதனை அவசர காலத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது ஃபெனிக்ஸ் 7 சீரிசில் வழங்கப்பட்டதை போன்றதாகும். ஆனால், இது இருமடங்கு அதிக பிரகாசமாக உள்ளது. இதில் டோபோ ஆக்டிவ் மேப்ஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் நெக்ஸ்ட் ஃபோர்க், விஷூவல் ரேஸ் பிரெடிக்டர், கிரேடு-அட்ஜஸ்ட் செய்யப்பட்ட பேஸ் ஆப்ஷன் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன.

    இத்துடன் ஹார்ட் ரேட், ஸ்டிரெஸ், SpO2, ஸ்லீப் டிராக்கிங், பாடி பேட்டரி, பிட்னஸ் ஏஜ் என ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் கார்பின் பே, இன்சிடெண்ட் டிடெக்‌ஷன் மற்றும் மியூசிக் ஸ்டோரேஜ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. கார்மின் எண்டியுரோ 2 மாடலின் விலை 1,099.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 87 ஆயிரத்து 511.35 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×