search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரு பூஜை விழா"

    • குரு பூஜை விழா நடைபெற்றது.
    • 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெரு, வெற்போடை எனும் குளக்கரையில் அமைந்துள்ள ராமலிங்கம் எனும் குருநாத சுவாமியின் 137-வது ஆண்டு குரு பூஜை விழா நடந்தது. இதையொட்டி காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக பெரிய ஏரி கீழக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு குரு நாத சுவாமிகளின் திருவீதி உலா காட்சி நடந்தது. இதில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது."

    • 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடக்கிறது.
    • காலை 7மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, ஸர்வ காயத்ரி ஹோமம் நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீலட்சுமி நாராயண பீடம் ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் அருளாசியுடன் 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதைெயாட்டி அன்று காலை 7மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அஷ்டதி ஹோமம், பஞ்சப்ரமே ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீ ஸூக்தம், புருஷஸூக்தம், மகாலட்சுமி, மிருத்யுஞ்ஜெய ஹோமம், ஸர்வ காயத்ரி ஹோமம் நடக்கிறது. காைல 9மணிக்கு மகா பூர்ணாஹூதி , 10மணிக்கு சுவாமிஜி தம்பதியர்களுக்கு கலசாபிஷேகம், 12மணிக்கு ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. சிறப்பு பூஜைகள் புளியம்பட்டி பாலுசாமி, சுரேஷ்பாபு, திருப்பூர் பாஸ்கர் சாஸ்திரிகள், வேத மாதா காயத்ரி குழுவினர்கள் நடத்துகின்றனர்.

    இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு நடக்கிறது. மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று காலை 11மணி முதல் விளக்கு பூஜை நடக்கிறது. அன்னபிரசாதமும் வழங்கப்படுகிறது. 

    • பெரம்பலூரில் அன்னை சித்தரின் 2-ம் ஆண்டு குருபூஜை விழா நாளை நடை பெறுகிறது
    • பேரூர் ஆதினம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசவல அடிகாளார், சூரியனார் கோவில் ஆதினத்தின் குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னின்று குருபூஜையை நடத்தி வைக்கின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் பிரம்மரிஷி மலை காகபுஜண்டர் ஸ்ரீதலையாட்டி சித்தரின் சீடரான அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள் மாக சித்தர்கள் டிரஸ்ட் ஆரம்பித்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஸ்ரீகாகன்னை ஈஸ்வரர் சித்தர் கோவிலை ஸ்தாபித்து, ஆசிரமம், கோசாலை அமைத்து ஆன்மீக பணி, நோய்ப்பிணி போக்கும் பணி, தான, தர்ம காரியங்கள் செய்து வந்தார்.

    அவர் கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி ஜீவசமாதி அடைந்தார். அவரது இரண்டாமாண்டு குருபூஜை விழா நாளை (11-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. பேரூர் ஆதினம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசவல அடிகாளார், சூரியனார் கோவில் ஆதினத்தின் குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னின்று குருபூஜையை நடத்தி வைக்கின்றனர்.

    விழாவையொட்டி திருவருட்பா பாராயணம், கோ பூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தர்கள் யாகபூஜை, ஸ்ரீகாகன்னை ஈஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை, சாதுக்களுக்கு வஸ்திரதானம், அன்னதானம் போன்றவை நடைபெறுகிறது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உமாமகேஸ்வரி, குமரகுரு, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எஸ்.பி. மணி, எம்.எல்.ஏ. பிரபாகரன், முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி ரகுபதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜேந்திரன், பெருமாள், இசையமைப்பாளர் கங்கை அமரன், திருச்சி தலைமை நீதிபதி கருணாநிதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மகா சித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகினி மாதாஜி, இயக்குநர்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் ராதா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×