என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கராச்சி"
- சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அடுத்த ஆண்டு நடத்துகிறது.
- இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கராச்சி:
வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே, 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும், ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களது முதன்மை நோக்கம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடந்தன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.
இந்நிலையில், பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சிக்கு பதில் ராவல்பிண்டியில் நடைபெறும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
- மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது.
- பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெப்ப அலை தாக்கியதில் கடந்த நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக எதி அறக்கட்டளை கூறியுள்ளது. இது சிந்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை மூன்று அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளது.
எதி டிரஸ்ட் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது.
இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி கூறுகையில், " கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன. மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.
வருத்தமான உண்மை என்னவென்றால், இந்த உடல்களில் பல கடுமையான வானிலையிலும், நிறைய சுமை கொட்டும் பகுதிகளில் இருந்து வந்தவை.
பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டது.
நேற்று மட்டும் 135 உடல்கள் தங்கள் பிணவறைக்கு வந்ததாகவும், திங்கட்கிழமை அன்று 128 உடல்கள் கிடைத்தது" என்றார்.
- வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது
- முதன்முறையாக வடாபாவ் சாப்பிட்ட கராமத்கான் அந்த உணவை பாராட்டினார்.
மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் பிரபலமான நொறுக்கு தீனிகளில் ஒன்றாக வடாபாவ் திகழ்கிறது. குறிப்பாக தெருவோர உணவகங்களில் அதிகளவில் விற்பனையாகும் வடாபாவுக்கென்றே வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த கராமத்கான் என்ற இன்ஸ்டாகிராம் பயனர், கராச்சியில் உள்ள கண்டோன்மன்ட் ரெயில் நிலையம் அருகே கவிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் உணவு கடை தொடர்பாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கவிதாவின் உணவகத்துக்கு சென்ற கராமத்கான் அந்த ஓட்டலில் வடாபாவ், பாவ் பாஜி, தால் சமோசா போன்ற உணவுப்பொருட்கள் சுவையாக இருப்பதாக கூறுகிறார்.
கடையை நடத்தும் கவிதா கூறுகையில், வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது. இப்போது கராச்சியில் வசிப்பவர்களும் அதை விரும்புகிறார்கள் என கூறுகிறார். முதன்முறையாக வடாபாவ் சாப்பிட்ட கராமத்கான் அந்த உணவை பாராட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- மும்பை 1993 வெடிகுண்டு மற்றும் 2008 தாக்குதல் சம்பவங்களில் தாவூத்திற்கு தொடர்புண்டு
- தாவூத்தின் சகோதரி மகள், அவர் கராச்சியில் வசிப்பதை உறுதிப்படுத்தினார்
இந்தியாவில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா, மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இவரை பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. "இன்டர்போல்" (Interpol) எனப்படும் சர்வதேச காவல்துறையால் உலகெங்கும் "சிகப்பு அலர்ட்" தேடுதல் அறிவிப்பு விடப்பட்டிருக்கும் தாவூத்தின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பா (Lashkar-e-Taiba) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் பல நாசவேலைகளை நடத்தியவர், தாவூத்.
1993 மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம், 2008 மும்பை தாக்குதல், புனே 2010 ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குற்றங்களில் இவர் தொடர்புடையவர்.
இந்தியாவை விட்டு தப்பி சென்ற தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்திருப்பதாக இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக குற்றம் சுமத்தி வந்தாலும், பாகிஸ்தான் அதனை மறுத்து வந்தது. ஆனால், 2023 ஜனவரி மாதம் தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பர்கரின் மகள் அலிஷா பர்கர், தாவூத் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காசி பாபா தர்காவிற்கு பின்புறம் ரஹிம் ஃபாகி எனும் பகுதிக்கு அருகே வசிப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் (NIA) இந்திய அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இருநாட்டு உறவை குலைப்பதில் தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், உடல்நிலை சீர்கெட்டதால், இரு தினங்களுக்கு முன் கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புகளுடன் தாவூத் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடலில் விஷம் செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிகிறது.
தாவூத் சிகிச்சை பெரும் தளம் முழுவதும் வேறு எந்த நோயாளியும் சேர்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு நிலவுவதாகவும் தெரிகிறது.
- ஐந்து காரணிகளின் அடிப்படையில் 172 நகரங்களில் ஆய்வு.
- பாகிஸ்தான் பொருளாதார சரிவின் விளிம்பில் உள்ளது.
உலகில் வாழ்வதற்கு மோசமான நகரங்கள் பட்டியல் குறித்து பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு நடப்பாண்டில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த பட்டியிலில் பாகிஸ்தானின் கராச்சி நகரம் இடம் பிடித்துள்ளது.
உள்கட்டமைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட ஐந்து காரணிகளின் அடிப்படையில் 172 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் மோசமான வாழ்க்கை நிலை, திருட்டு, கடத்தல், போதைப்பொருள், வன்முறை மற்றும் மோசமான சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் கராச்சி நகரம் இடம் பிடித்துள்ளது.
குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றால் பாகிஸ்தான் பொருளாதார சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வாழக்கூடிய நகரங்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் கனடாவிலும் உள்ளன. நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை வாழ்க்கையின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கான முதல் 10 இடங்களின் பட்டியலில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்