search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜூனா ரணதுங்கா"

    • உடல் பருமனாக இருந்தாலும் அவரது பேட்டிங்கும், கேப்டன்ஷிப்பும் அந்த சமயத்தில் வெகுவாக கவர்ந்தது.
    • 60 வயதான ரணதுங்கா உடல்எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது (50 ஓவர்) அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், அர்ஜூனா ரணதுங்கா. உடல் பருமனாக இருந்தாலும் அவரது பேட்டிங்கும், கேப்டன்ஷிப்பும் அந்த சமயத்தில் வெகுவாக கவர்ந்தது.

     

    கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் குதித்தார். எம்.பி.யாகி மந்திரியாகவும் பதவி வகித்தார். கிரிக்கெட் நிர்வாகத்திலும் பல பணிகளை கவனித்தார்.

    இந்த நிலையில் 60 வயதான ரணதுங்கா உடல்எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார். இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. ரணதுங்காவா இது, நம்பவே முடியவில்லை என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியமுடன் பதிவிட்டு வருகின்றனர்.

    • அர்ஜூனா ரணதுங்கா இலங்கை ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.
    • இலங்கை விளையாட்டுத் மந்திரி ரோஷன் ரணசிங்கே இந்த நியமனத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் எம்.பி.யுமான அர்ஜூனா ரணதுங்கா இலங்கை ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். இலங்கை விளையாட்டுத் மந்திரி ரோஷன் ரணசிங்கே இந்த நியமனத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினையை தொடர்ந்து விளையாட்டு மந்திரி பொறுப்பை நமல் ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து விளையாட்டு கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் உறுப்பினர்கள் அந்த பதவியில் இருந்து விலகினர் என்பது நினைவுகூரத்தக்கது.

    15 பேரை கொண்ட விளையாட்டு கவுன்சில் இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து அந்த நாட்டு விளையாட்டு மந்திரிக்கு ஆலோசனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×