search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணிவகுப்பு ஒத்திகை"

    • 76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
    • இதற்காக மாவட்ட போலீசார் சார்பில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

    சேலம்:

    76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங் களுக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கலெக்டர் கார்மேகம், தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக மாவட்ட போலீசார் சார்பில் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. மேலும் பள்ளி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை அந்தந்த பள்ளியில் நடந்து வருகிறது.

    • இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகுவிமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • முப்படை, தேசிய மாணவர் படை, காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே இந்த ஆண்டு குடியரசு தின விழா, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்பட்டு 22 நிமிடங்களில் விழா நிறைவடைந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகுவிமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

    முப்படை, தேசிய மாணவர் படை, காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழாவில் மீண்டும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    தமிழக அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறுகிறது

    • குடியரசு தின நிகழ்ச்சிகள் உழைப்பாளர் சிலை அருகே நடத்தப்படுகிறது.
    • நேப்பியர் பாலம், போர் நினைவுச்சின்னம் வழியாக சென்று தீவுத்திடல் பகுதியில் ஒத்திகை முடிந்தது.

    சென்னை:

    ஜனவரி 26-ந்தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனால் குடியரசு தின நிகழ்ச்சிகள் உழைப்பாளர் சிலை அருகே நடத்தப்படுகிறது. இதையொட்டி ஒத்திகை நிகழ்ச்சிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு இன்று ஒத்திகை நடத்தப்பட்டது. எப்போதும் கலங்கரை விளக்கம் அருகில் இருந்து ஒத்திகை புறப்பட்டு நடத்தப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை மெரினா நீச்சல் குளம் சர்வீஸ் ரோடு பகுதியில் இருந்து குடியரசு தின விழா ஒத்திகை இன்று தொடங்கியது. அங்கிருந்து காமராஜர் சாலையை வந்தடைந்தது. போலீசார் ஒத்திகையை நடத்தினர்.

    நேப்பியர் பாலம், போர் நினைவுச்சின்னம் வழியாக சென்று தீவுத்திடல் பகுதியில் ஒத்திகை முடிந்தது. வருகிற 22, 24 ஆகிய தேதிகளில் ஒத்திகை நடத்தப்படுகிறது. மெரினா பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இந்த ஒத்திகை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்
    • மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள களியக்காவிளை ஆரல்வாய்மொழி அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பை பலப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    75வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

    கொரோனா பரவல் காரண மாக கடந்த 2 ஆண்டு களாக கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கான முன்னேற் பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அண்ணா விளையாட்டு அரங்கம் சீர மைப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் போலீ சாரின் அணிவகுப்பு ஒத்தி கை நிகழ்ச்சியும் இன்று நடந்தது.

    நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் போலீ சாரின் அணிவகுப்பு ஒத்தி கை நிகழ்ச்சி நடந்தது. சுதந்திரதினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய சந்திப்பு களிலும் சோதனை சாவடி களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகர்கோவில் கன்னியாகுமரி குழித்துறை இரணியல் நாங்குநேரி ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கிறது. கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடு வதற்கு ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள களியக்காவிளை ஆரல்வாய்மொழி அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பை பலப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.கடலோர காவல் படையினர் நவீன படகுகளில் கண் காணிப்பு பணியை மேற் கொள்வார்கள்.

    ×