என் மலர்
தமிழ்நாடு
காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
- இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகுவிமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- முப்படை, தேசிய மாணவர் படை, காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தமிழகத்தில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கின்றன. எனவே இந்த ஆண்டு குடியரசு தின விழா, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்பட்டு 22 நிமிடங்களில் விழா நிறைவடைந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு குடியரசு தினத்தை வெகுவிமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
முப்படை, தேசிய மாணவர் படை, காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழாவில் மீண்டும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
தமிழக அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறுகிறது