search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ- டிரேடிங் மையம்"

    • 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    அவிநாசி :

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கங்களில், 7 கூட்டுறவு விற்பனை சங்கங்களில், இ- டிரேடிங் முறையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனுமதித்து நிதி ஒதுக்கீடும் வழங்கியுள்ளது.பருத்தி ஏலம் சார்ந்த அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இதை மேற்கொள்ள 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கட்டிட கட்டுமானப்பணி துவங்கியுள்ளது.சங்க நிர்வாகிகள் கூறுகையில், புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட இ -டிரேடிங் நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்கள் பொருத்தப்பட்டு பருத்தி ஏலம் தொடர்பான விலை, அளவு உள்ளிட்ட விவரங்கள் கம்ப்யூட்டர் திரையில் விவசாயிகளுக்கு தெரியப்படுத்துவதுடன் விவசாயிகளின் மொபைல் எண்ணுக்கும் அதுகுறித்த தகவலை அனுப்பி வைக்கும் வகையிலான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இப்பணி 6 மாதத்தில் நிறைவு பெறும் என்றனர்.

    இச்சங்கத்தில் அவிநாசி, சத்தி, கோபி, தாராபுரம், ஈரோடு என மாநிலத்தின் பல இடங்களில் உள்ள 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.தாங்கள் விளைவிக்கும் பருத்தியை இச்சங்கம் மூலம் விற்கின்றனர். வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது.

    ×