search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபடா"

    • ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • எம்.ஐ. கேப்டவுன் அணியில் ரஷித்கான், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், காகிசோ ரபடா, டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    கேப்டவுன்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகளையும் இந்திய தொழிலதிபர்களே வாங்கியுள்ளனர்.

    முதலாவது தென்ஆப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கிறது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்.ஐ. கேப்டவுன் அணியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்கள் லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா, இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தங்கள் அணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக எம்.ஐ. கேப்டவுன் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்சுக்கு சொந்தமான ஜோகன்னஸ்பர்க் அணியில் தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×