search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு வரவேற்பு"

    • இனிப்புகள் வழங்கினர்
    • ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு முழுவதிலும் கோடை விடுமுறை முடிவடைந்து ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்டன. ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு பகுதியில் உள்ள நடேசனார் அரசு நிதி உதவி ஆரம்ப பள்ளியில் நேற்று முன்தினம் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வாலாஜா மேற்கு வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், துணை தலைவர் சபரிகிரீசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.

    இதில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பொற்கொடி உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2022-2023ம் ஆண்டு முதலாம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    தேவதானப்பட்டி:

    மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023ம் ஆண்டு முதலாம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    துைண பேராசிரியர் பிந்து வரவேற்புரை யாற்றினார். கல்லூரி முதல்வர் ஐசக் தொடக்க விழா பேருரையாற்றினார். இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருதி அவர்களை சரியான பாதைக்கு கல்லூரி நிர்வாகம் அழைத்துச் செல்லும் என்றும் உறுதி அளித்தார்.

    கல்லூரியின் துணை இயக்குனர் ஜோசப் வில்லியம், இயற்பியல் துறை தலைவர் சாந்தினி, பொறுப்பு தலைவர் பானுபிரபா உள்பட பலர் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று பேசினர்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    ×