என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சங்கர் ஜிவால்"
- மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.
- சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை கடிதத்தில்,
* சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
* அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
* மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.
* 5 மாவட்டங்களில் சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது. மிக தெளிவான டிரோன், பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.
* நான்கு ஒப்பந்த நிறுவனங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. ஒரு இடத்தில் 2 இயந்திரங்களை வைத்து மட்டுமே மணல் அள்ளுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளது.
* சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
* அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாதது ஒப்பந்ததாரர்கள் சொத்துக்களை வாங்கி குவித்ததையும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
* அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் கடந்த ஆண்டு மட்டும் அதிகம் அள்ளப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெல்பேர் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம்.
- போலீசார் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலர்களின் நலன் காப்பதற்காக 'வாட்ஸ்அப்' குழுக்களை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போலீசார், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து இந்த வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் காவலர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பதிவு செய்து தமிழ்நாடு போலீஸ் வெல்பேர் என்ற பெயரிலான இந்த குழுவை தங்களது பகுதிக்கு ஏற்ப அதிகாரிகள் மாற்றம் செய்து செயல்படுத்த வேண்டும்.
உதாரணமாக கீழ்ப்பாக்கம் பகுதி வெல்பேர் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம்.
இதில் போலீசார் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பணி ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சங்கர் ஜிவாலிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு விடைப்பெற்றார்.
- புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை தலைமையகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சென்னை:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
இருவரும் இன்று ஒரே நாளில் பதவியேற்றுக் கொண்டனர். முதலில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்றார். வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலு வலகத்தில் 8-வது மாடியில் உள்ள கமிஷனர் அறையில் சென்னை மாநகர 109-வது கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்றார். இதைதொடர்ந்து அங்கிருந்து விடைபெற்று டி.ஜி.பி.யாக செல்லும் சங்கர் ஜிவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் புதிய போலீஸ் கமிஷனருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதன்பின்னர் சங்கர் ஜிவால், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு 31-வது டி.ஜி.பி.யாக அவர் பொறுப்பேற்றார்.
பணி ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சங்கர் ஜிவாலிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு விடைப்பெற்றார். புதிய டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு காவல்துறை தலைமையகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள சங்கர்ஜிவால் சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி போலீசார் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர் ஆவார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியை தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து காவல்துறையின் உயரிய பதவியான சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. அந்தஸ்தை அடைந்துள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகியுள்ள சந்தீப்ராய் ரத்தோர் டெல்லியை சேர்ந்தவர். 1992-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் அதிகாரியான இவர் காவல்துறையில் பல்வேறு பதவிகளை அலங்கரித்து இந்த பதவியை எட்டிப்பிடித்து உள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி என்பது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் கனவு பணியாகவே பார்க்கப்படுகிறது.
சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில் தமிழக அரசு சந்தீப்ராய் ரத்தோரை அந்த பதவியில் அமர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடியில் புதிய கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்பட்டபோது அங்கு முதல் கமிஷனராக பொறுப்பு வகித்த ரத்தோர் 2 ஆண்டுகள் அங்கு சிறப்பாக பணியாற்றினார். தற்போது சென்னை கமிஷனராகி உள்ளார்.
புதிய போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் இருவருமே காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நலனில் அதிக அக்கறை காட்டுபவர்கள் என்பதால் பொதுமக்கள் மற்றும் போலீஸ் நலன் மேலும் காக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- சிறப்பு படையில் துடிப்பான இளம் காவலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- சென்னை மாநகரில் 2004-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற 6 பெண்களின் கொலையில் எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது.
சென்னை:
சென்னை மாநகரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள துப்பு துலக்கப்படாத கொலை வழக்குகளை தூசு தட்டி விசாரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதற்கும், பழைய குற்ற வழக்குகளை கண்டுபிடிப்பதற்கும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வரிசையில் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கடந்த 10 ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருக்கும் கொலை வழக்குகளை விசாரிக்க சிறப்பு போலீஸ் துப்பறியும் படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு படையில் துடிப்பான இளம் காவலர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ள போலீசார் மிகவும் நுட்பமாக துப்பறியும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக தகவல்களை திரட்டுவதில் கைதேர்ந்த காவலர்களும் இந்த சிறப்பு படையில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் துப்பு துலக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட சுமார் 30 கொலை வழக்குகளை தூசு தட்ட தொடங்கி உள்ளனர். கொலை சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் ஆதாரங்களை நவீனப் படுத்தி அதன் மூலமாக அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விடவும் இந்த சிறப்பு தனிப்படை முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரில் நடந்த துப்பு துலங்காத பழைய கொலை வழக்குகளுக்கு உயிர் கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.
அதே நேரத்தில் பழைய வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்படாமல் இருந்தால் முடிந்து போன வழக்குகளுக்கு மிகவும் உயிரூட்டுவது என்பது சிக்கலாகவே இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்துள்ள பேட்டியில் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படையை இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இந்த படையில் பணிபுரிய திறமையான இளம் காவலர்கள் ஆர்வமுடன் சேர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார். 15 நாட்களுக்கு ஒருமுறை கொலை வழக்குகளின் நிலை என்ன என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கமிஷனர் கூறியுள்ளார்.
இதுபோன்று சென்னை மாநகர காவல் துறையில் துப்பு துலங்காமல் இருக்கும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் 2004-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற 6 பெண்களின் கொலையில் எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது. விடை தெரியாத கேள்வியை போல மர்மமாகவே மாறிப்போன அந்த கொலைகள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
2004 ஜூன் 21: கே.கே.நகரில் பரிமளம் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இவரது கணவர் புள்ளியியல் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தனியாக இருந்த பரிமளம் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்த நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் கொலையாளிகள் திருடிச் சென்றனர். இந்த கொலை சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் துப்பு துலங்காமலேயே உள்ளது.
2007-நவ.17: வேளச்சேரி சங்கர் அவென்யூ இந்திரா தெருவில் வசித்து வந்த வேக்கப் மேரி-வேக்கப் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இன்னும் துப்பு துலங்காமலேயே உள்ளது. இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 2011: கோடம்பாக்கம் பாரதீஸ்வர காலனி பகுதியில் பரமேஸ்வரி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் சுமார் 12 ஆண்டுகளாகியும் எந்தவித துப்பும் கிடைக்காமலேயே உள்ளது.
அக்டோபர் 2011: மூதாட்டி பரமேஸ்வரி கொலை சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே ஆதிலட்சுமி என்கிற துணை நடிகை ஒருவரும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையும் கிணற்றில் போட்ட கல்லாகவே மாறிப்போனது. கோடம்பாக்கம் பகுதியையே கலங்கடித்த இந்த 2 கொலை சம்பவங்களிலும் துப்பு துலக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நவம்பர்-2011: கே.கே.நகர் நெசப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ரஞ்சிதா என்கிற பெண் கொலை செய்யப்பட்டார். கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப் பட்ட இந்த சம்பவத்திலும் மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
ஏப்ரல் 2013: பெரம்பூரில் சுமதி என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணையும் துப்பு எதுவும் கிடைக்காமல் முடக்கப்பட்டிருந்தது. இப்படி மேற்கண்ட 6 பெண்களை கொன்றவர்களும் யார்-யார்? என்பது பற்றிய தகவல்கள் தெரியாத நிலையில் போலீசாரும் அது தொடர்பான பதிவேடுகளை மூலையில் தூக்கி போட்டிருந்தனர். இந்த பதிவேடுகள் அனைத்தும் தற்போது தூசு தட்டி எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை செயல்படுத்தி வருகிறது.
சென்னை:
சுதந்திர தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் அரசு துறைகள், பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்த பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதை வழங்குகிறார். கமிஷனர் சங்கர் ஜிவால் விருதை பெற்றுக்கொள்கிறார்.
இதே போன்று வேளாண் எந்திர வாடகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக வேளாண் துறைக்கும் நல் ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது.
பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்