search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்திற்காக குழு அமைப்பு"

    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அங்கீகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • அறுவை சிகிச்சை அங்கீகாரக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்புதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படி பொது மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அங்கீகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவின் நோக்கமானது மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகும்.இக்குழு கல்லூரி முதல்வர் அமுதவல்லி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மாவட்டங்களான சேலம். தருமபுரி. திருவணணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அறுவை சிகிச்சைக்கான அங்கீகார குழு மூலம் காலதாமதம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளும் மனித உறுப்பு அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் பெறுவதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக்குழுவின் ஒப்புதல் பெற்ற பின்புதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்கள் இக்குழுவை அணுகி உரிய நேரத்தில் ஒப்புதல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×