search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிஸ் இந்தியா"

    • பாட்டு, டான்ஸ் குறித்தும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசிகொண்டிடுருகின்றன.
    • 90 சதவீத மக்களுக்குத் திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு இல்லாமல் உள்ளது.

    மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இதுவரை ஒரு தலித் அல்லது பழங்குடியின பெண்ணுக்குக் கூட இடம்பெறாதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நேற்று நடைபெற்ற 'சம்விதன் சம்மான் சம்மேளன்' நிகழ்ச்சியில் மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

    எந்தெந்த அரசு அமைப்புகளில், எந்த ஜாதிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்ற தரவுகளை முதலில் சேகரித்தாக வேண்டும். 90 சதவீத மக்களுக்குத் திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு  இல்லாமல் உள்ளது.

    இதுவரை மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்களின் பட்டியலில் தலித் அல்லது பழங்குடியின பெண் யாராவது இருப்பார்களா என்று பார்த்தேன். ஆனால், தலித், பழங்குடியினர் அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த பெண்கள் ஒருவர் கூட இல்லை. ஊடகங்களில் உயர்மட்டத்தில் இருக்கும் தொகுப்பாளர்களில் ஒருவர் கூட இந்த சமூகங்களை சேர்நதவர்கள் இல்லை. ஆனால் இன்னும் பாட்டு, டான்ஸ் குறித்தும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசிகொண்டிடுருகின்றன.

    விவசாயிகளைப் பற்றியோ தொழிலாளர்களைப் பற்றியோ அவை பேசுவதில்லை. அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது என்று தெரிவித்துள்ளார். 

    • நியூயார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் வசித்து வருகிறார்.
    • அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாலவட்டம் கைப்பட்டூர் செறிவுகால் பகுதியை சேர்ந்த தம்பதி ஜான் மேத்யூ-ராஜி மேத்யூ. இவர்களது மகள் மீரா தங்கம் மேத்யூ.

    ஜான் மேத்யூவின் குடும்பம் முதலில் கேரளாவில் தான் இருந்தது. அப்போது தான் மீரா தங்கம் மேத்யூ பிறந்தார். பின்பு தனது 3 வயதில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட மீரா தங்கம் மேத்யூ, அங்கே தான் வாழ்ந்து வந்தார்.

    அவர் நியூயார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் வசித்து வருகிறார். வாலிப வயதை எட்டியதும் மீராவுக்கு மாடலிங் துறையில் விரும்பம் வந்தது. அதன் காரணமாக பல்வேறு அழகி போட்டிகளில் அவர் பங்கேற்றார். 'மிஸ் ஸ்டேட்டன் ஐலேண்ட்' என்ற பட்டத்தையும் அவர் வென்றார்.

    கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற மீரா, அமெரிக்காவின் பிரதிநிதியை அனுப்பும் 'மிஸ் வோல்டு அமெரிக்கா' போட்டியில் பங்கேற்க உள்ளார். நியூயார்க்கை பிரதிநிதித் துவப்படுத்தும் பட்டங்களின் ஒன்றான மிஸ் லிபர்ட்டியாக மீரா வருகிறார்.

    கேரள பெண்ணான மீரா தங்கம் மேத்யூ அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆண்டுதோறும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் பங்கேற்கும் அழகி போட்டி நடைபெறும். இதில் தனிஷா பங்கேற்பது வழக்கம்.
    • இந்த ஆண்டுக்கான போட்டி நியூ ஜெர்சியில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரண்மனையில் நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம், ஏற்றமானூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணசர்மா.

    நாராயணசர்மாவின் மனைவி மஞ்சிமா கவுசிக். இவர்களின் மகள் தனிஷா. இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

    நாராயண சர்மா சமீபத்தில் இறந்து விட்டார். என்றாலும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வந்தனர்.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆண்டுதோறும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் பங்கேற்கும் அழகி போட்டி நடைபெறும். இதில் தனிஷா பங்கேற்பது வழக்கம்.

    இதற்கு முன்பு நடந்த போட்டியில் தனிஷாவுக்கு மிஸ் திறமைச்சாலி பட்டம் கிடைத்தது. இந்த ஆண்டுக்கான போட்டி நியூ ஜெர்சியில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரண்மனையில் நடந்தது.

    இந்த போட்டியில் 30 மாநிலங்களில் இருந்து 74 பேர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் மிஸ் அழகிய முகம் போட்டியில் தனிஷாவுக்கு முதல் பரிசு கிடைத்தது.

    பட்டம் வென்ற தனிஷாவை போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பலரும் வாழ்த்தினர்.

    ×