என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோமாளி"
- 1990 களில் இல்லாத டிஎன்ஏ டெக்னாலஜி 2017 இல் எப்.பி.ஐக்கு கை கொடுத்தது.
- 61 வயதான ஷீலா சிறையில் இருந்து வெளியே வந்தார்.
கணவனின் முன்னாள் மனைவியைக் கோமாளி வேசம் போட்டு கொலை செய்த அமெரிக்கப் பெண்மணி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த புளோரிடா கில்லர் கிளவுன் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கில்லர் கிளவுன் கொலை
மைக்கல் வாரன் என்பவரது மனைவி மார்லன் வாரன் என்ற பெண்மணியில் வீட்டின் காலிங் பெல்லை கிளவுன்[ கோமாளி] வேஷம் போட்ட ஒருவர் அழுத்தினார். கதவை திறந்த மார்லனிடம், கையில் வைத்திருந்த பலூன்களை அந்த கோமாளி கொடுத்தது. பலூங்களை வாங்கிக்கொண்டு How nice என்று மார்லன் சொல்லி முடிக்கும் முன்னர் அந்த கோமாளி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மார்லன் முகத்திலேயே சுட்டது. மார்லன் உயிரிழக்க கோமாளி வேடம் போட்டவர் அங்கிருந்து தப்பினார்.
ஷீலா
இந்த கொலை வழக்கில் எந்த விதமாக துப்பும் கிடைக்காமல் எப்.பி.ஐ. திணறி வந்தது. மைக்கல் வாரன் ஷீலா என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் 1990 களில் இல்லாத டிஎன்ஏ டெக்னாலஜி 2017 இல் எப்.பி.ஐக்கு கை கொடுத்தது. அதன்படி மைக்கல் வாரனின் இரண்டாவது மனைவி ஷீலா கீன் வாரன் தான் அந்த கொலையாளி என்ற முடிவுக்கு எப்.பி.ஐ.வந்தது.
மரண தண்டனை
ஷீலா கோமாளி துணி வாங்கியது, குறிப்பிட்ட அந்த பலூன்களை வாங்கியது என்று ஆதாரங்களைச் சேகரித்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஷீலாவை எப்.பி.ஐ. கைது செய்தது. 7 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது, ஆனால் தனது குற்றத்தை ஷீலா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்வந்து ஒப்புக்கொண்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் தற்போது நன்னடத்தை காரணமாக ஷீலா முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் நவம்பர் 2 அன்று சிறையில் இருந்து 61 வயதான ஷீலா வெளியே வந்தார்.
குற்றம்
கொலைசெய்யப்பட்ட மார்லனின் கணவர் மைக்கல் ஒரு கார் டீலராக இருந்துள்ளார். ஷீலா இவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். மைக்கிலும் ஷீலாவும் காதல் உறவில் இருந்ததாக அவர்களது சகாக்கள் கூறுகின்றனர். மார்லன் கொல்லப்பட்ட பின்னர் திருமணம் செய்துகொண்ட மைக்கல் மற்றும் ஷீலா கைது செய்யப்படும்வரை ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
அமெரிக்காவின் கில்லர் கிளவுன்
ஆனால் தற்போது மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காகவே ஷீலா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் அவர் கொலை செய்யவில்லை என்றும் அவரது வக்கீல் கூறியுள்ளார். முன்னதாக கடந்த 1970 களில் 33 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் ஜான் வெயின் கேசி. கிளவுன் வேடமைந்த இவர் அமெரிக்காவின் கில்லர் கிளவுன் என்று அறியப்படுகிறார். அதே பாணியில் ஷீலா புளோரிடாவின் கில்லர் கிளவுன் என்று அறியப்படுகிறார்.
- பிரதீப் இயக்கி நடித்த 'லவ் டுடே' படம் ஹிட்டானது. இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் அதிகரித்தது
- இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப்ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்
2019 - ம் ஆண்டில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் ஜெயம் ரவி, காஜல்அகர்வால் ஆகியோர் இதில் நடித்தனர்.
இந்தப்படத்தை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் ஹிட்டானது.
இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க பிரதீப் 'கமிட்' ஆகியுள்ளார்.
அந்த படத்தை தற்போது 'ஓ மை கடவுளே' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது.
இந்த திரைப்படம் சம்பந்தமான அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ லவ் டுடே பட பாணியில் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவனாக அந்த அறிமுக வீடியோவில் பிரதீப் ரங்கநாதன் அவரது கல்லூரி காலங்களை பற்றி பேசுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த புதிய படத்தில் கதாநாயகனாக பிரதீப் நடிக்க உள்ளார்.
- விரைவில் இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகளில் இயக்குனர் அஸ்வத் ஈடுபட்டு உள்ளார்.
2019 - ம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவை படம் 'கோமாளி'. வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் இதனை தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல்அகர்வால் ஆகியோர் இதில் நடித்தனர்.
இந்தப்படத்தை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் ஹிட்டானது.
இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் மார்க்கெட் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப்ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க பிரதீப் 'கமிட்' ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 'ஓ மை கடவுளே' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த புதிய படத்தில் கதாநாயகனாக பிரதீப் நடிக்க உள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகளில் இயக்குனர் அஸ்வத் ஈடுபட்டு உள்ளார்.
'ஓ மை கடவுளே' படம் 2020 -ம் ஆண்டு வெளியான காதல் நகைச்சுவை படமாகும். இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கினார்.
இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணிபோஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படம் திரையரங்குகளில் 2020 பிப்ரவரி14 -ந்தேதி காதலர் தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதீப் ரங்கநாதன் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
- இவர் இயக்கியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.
பிரதீப் ரங்கநாதன்
இதுவரை இந்த படம் ரூ.20 கோடி வரை வசூலித்துள்ளதால் இப்படத்திற்கு திரையரங்க எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் திரையரங்க எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜெயம் ரவி
இந்நிலையில், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன்.
- இவரின் அடுத்த படத்திற்கு லவ் டுடே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து நல்ல வரவேற்பை பெற்றது.
லவ் டுடே
இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை இப்படத்திற்கு சூட்டியுள்ளனர்.
இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, லவ் டுடே படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் சோகமான பாடலாக உருவாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்