என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சைமா"
- ஜவுளித்தொழிலுக்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள், எந்திரங்கள் போன்றவற்றிற்கு 5 முதல் 7.5 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
- விஸ்கோஸ் செயற்கை பஞ்சு மீது கிலோ ஒன்றுக்கு 0.512 அமெரிக்க டாலர் குவிப்பு வரி விதிக்க டி.ஜி.டி.ஆர்.பரிந்துரை செய்துள்ளது.
திருப்பூர்:
விஸ்கோஸ் பஞ்சின் மீது உத்தேசிக்கப்பட்டுள்ள அபரிமிதமான குவிப்பு வரியை நிராகரிக்க மத்திய நிதியமைச்சருக்கு சைமா வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) தலைவர் ரவிசாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை பஞ்சு மீது கிலோ ஒன்றுக்கு 0.512 அமெரிக்க டாலர் குவிப்பு வரி விதிக்க டி.ஜி.டி.ஆர்.பரிந்துரை செய்துள்ளது. இதை மத்திய நிதியமைச்சகம் நிராகரிக்க வேண்டும். ஜவுளித்தொழிலுக்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள், எந்திரங்கள் போன்றவற்றிற்கு 5 முதல் 7.5 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.ஆனால் விஸ்கோஸ் செயற்கை பஞ்சுக்கு 28 சதவீதம் குவிப்பு வரி விதிப்பது நியாயமற்றது. இது ஒட்டுமொத்த விஸ்கோஸ் செயற்கை பஞ்சு ஜவுளி சங்கிலியை பெரிதும் பாதிக்கும்.
பெரும்பாலான நூற்பாலைகள் பருத்தியுடன் 10 முதல் 15 சதவீதம் வரை விஸ்கோஸ் பஞ்சை கலந்து தற்போதுள்ள வர்த்தக போட்டியில் தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில் உத்தேச குவிப்பு வரி, நூற்பாலைகளை கடுமையாக பாதிக்கும். அதனால் அபரிமிதமான குவிப்பு வரியை நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பனியன் உற்பத்தி நிறுவனங்களில், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது.
- பனியன் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளருடன் பேசி போனஸ் வழங்க வேண்டும்
திருப்பூர் :
நிட்டிங், டையிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரிங், பனியன் உற்பத்தி நிறுவனங்களில், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பனியன் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளருடன் பேசி போனஸ் வழங்க வேண்டும்.
பண்டிகைக்கு முன்னதாகவே போனஸ் வழங்கி முடிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளை போலவே, எவ்வித பிரச்னையும் ஏற்படாதவகையில் சுமூகமாக பேசி போனஸ் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 29ந் தேதி சைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
- 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.
திருப்பூர் :
சைமா சங்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 29ந்தேதிசைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் போட்டியிடும் பாலச்சந்தர் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அதில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக தொழில் சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் மாற்றங்களும்ஏற்படும் சிக்கல்களையும் களைவதற்கு சங்கத்தில் முனைப்புடன் கூடிய செயலாற்றும்திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாகசங்கத்தில் பதவி வகித்து வரும் மூத்த உறுப்பினர்களில் பலர் தொழில் நிலையில் இருந்துவிலகி உள்ள காரணத்தினால் மாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வேண்டும் என்று எங்கள் அணி சார்பாக வேண்டுகோள்வைக்கப்பட்டது.
ஆயினும் சங்கத்தின் செயற்குழு கூடி வழக்கம்போல் ஏற்கனவே உள்ளஅனைவரும் தங்கள் பதவியிலேயே தொடர்வார்கள் என தீர்மானித்தனர். எனவே நாங்கள்தேர்தலை எதிர்கொள்வதற்காக வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் ஏறத்தாழ25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதாவது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவர்களது செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை முன்வைத்தும் பலர் தொழிலை விட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருவது தொழிலுக்கு தேவையான நன்மைகளை நிர்வாகிகளால் கோரிப் பெற முடியாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாற்றத்திற்கான அணியை உருவாக்கி தற்போது தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவராக நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைத்தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.இவர் அவர் கூறினார்.
- ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.
- லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்–பூர் :
நூற்பாலைகளுக்கு விவசாயிகள் நேரடியாக பஞ்சை விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு சைமா சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பாதிப்பு, அபரிமிதமான நூல் விலை உயர்வால் திருப்பூர் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைததறி, கைத்தறி ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் நடப்பு ஆண்டுக்கான பருத்தி சீசன் தொடங்கும்போது, மத்திய அரசு கவனமாக செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் ஜவுளித்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு விடும்.
தேவைக்கு மேல் கொள்முதல் செய்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்கும் பெரும் வியாபாரிகள், ஒழுங்குமுறை விற்பனை கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தும், முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கும் இந்திய பருத்தி கழக நிறுவனம் ஆகியவற்றால் நூல் விலை உயர்வு, பற்றாக்குறைக்கு காரணம் ஆகும். இதற்கான தீர்வுகளையும் எங்கள் சங்கம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு நியாயமான ஆதரவு விலையை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் விவசாயிகள் நேரடியாக பஞ்சு அரைப்பவர்களுக்கும், நூற்பாலைகளுக்கும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்க வியாபாரிகள் மறுக்கும்போது அல்லது கொள்முதல் செய்ய வராதபோது இந்திய பருத்தி கழகம் தலையிட்டு அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்த பருத்தியை அதிகமாக வாங்கி இருப்பு வைக்கும் வியாபாரிகளை தவிர்த்து உற்பத்தி செய்யக்கூடிய நூற்பாலைகளுக்கு விற்க வேண்டும்.
பருத்தி, பஞ்சு இருப்பு திருப்தியாக இருக்கும்போது கூட உள்நாட்டு உற்பத்திக்கு போதுமான அளவு வினியோகம் செய்து மீதம் உள்ள இருப்பை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அனுமதிக்க வேண்டும். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பருத்தி, பஞ்சு விசயத்தில் நிபுணத்துவம் உள்ள குழுவை அமைத்து, பருத்தி அதிகம் விளைவித்தல், வியாபாரிகள், இந்திய பருத்தி கழகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கொள்கைக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை அந்த குழு கூடி தேவையான பரிந்துரைகளை தர வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்