search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலி தொழிலாளி பலி"

    • தொட்டியம் தோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் இரும்பு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • சமத்துவபுரம் செல்லும் சாலையில் செல்வதற்காக திருச்செங்கோடு- பரமத்தி செல்லும் சாலையை கடந்த போது மோட்டார்சைக்கிள் மீது திருச்செங்கோட்டில் இருந்து அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் ஓட கிணத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58).இவர் இரும்பு பாலம் அருகே உள்ள தொட்டியம் தோட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கம்பி தயாரிக்கும் இரும்பு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சண்முகம் வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். நல்லூர் அருகே தொட்டியம் தோட்டம் 4 ரோடு பகுதியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையில் செல்வதற்காக திருச்செங்கோடு- பரமத்தி செல்லும் சாலையை கடந்த போது மோட்டார்சைக்கிள் மீது திருச்செங்கோட்டில் இருந்து அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தார். இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சண்முகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் சக்திவேல் (39) என்பவர் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மோகன் பிரசாந்த் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • திரும்பி படுக்கும்போது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து விட்டார்.
    • தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பெரிய புலியூர், காசிலிங்க புரம் பகுதியை சேர்ந்தவர் செம்மனன் (45). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று செம்மனன் சேவாக்க வுண்டனூ ர்-வைரமங்கலம் ரோடு காசிலிங்கபுரத்தில் வாய்க்கா ல் மோரி மீது குடிபோதையில் படுத்து இருந்தார்.

    அவர் திரும்பி படுக்கும்போது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து விட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் செம்மனை மீட்டனர். வாய்க்காலுக்குள் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்கா க பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செம்மனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பழனிச்சாமி சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பவானி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்

    பவானி

    பவானி அருகில் உள்ள கருவாச்சி அம்மன் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (62). விவசாய கூலி தொழிலாளி ஆவார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பவானி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பவானி சக்தி மெயின் ரோட்டில் வந்தபோது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் பழனிச்சாமி தூக்கி வீசப்ப ட்டு பலத்த காயமடைந்தார். காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

    இறந்த பழனிச்சாமி உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனு ப்பப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி, ஜம்பை, பாரதி நகர் பகுதி யில் வசிக்கும் ஆனந்தகுமார் (35) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேனியில் சரக்கு வாகனம் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கோம்பை திரு.வி.க. தெருவைச் சேர்ந்த சின்ன மாரி முத்து மகன் சிலை ராஜா (வயது 32). மரம் வெட்டும் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கோம்பை - உத்தமபாளையம் சாலையில் குடிசை மாற்று வாரிய கட்டிடத்துக்கு எதிரே சென்று கொண்டு இருந்த போது அவர் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சதீஸ்குமார் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பேருந்தின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறியது.
    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தேவமூர்த்தி உயிரிழந்தார்.

    நல்லம்பள்ளி,

    நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் தேவமூர்த்தி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று இரவு லளிகத்திலிருந்து நல்லம்பள்ளி நோக்கி வந்த அரசு நகர பேருந்தில் நார்த்தம்பட்டியில் பஸ்ஸின் பின்பக்கத்தில் ஏறியுள்ளார்.

    அப்போது கால் தவறி படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பேருந்தின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தேவமூர்த்தி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான் கோட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சேகர் அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் நீரோடை செல்லும் பாலத்தின் மேல் இரவு படுத்து உறங்கி உள்ளார்.
    • அப்போது குடி போதையில் நீரோடையில் தவறி விழுந்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை-அரச்சலூர் ரோட்டில் உள்ளது வீரப்பம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46). கூலி தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கே.ஜி.வலசு அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார்.

    பின்னர் சேகர் வீட்டிற்கு செல்லாமல் அளவிற்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் கே.ஜி., வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் உள்ள ரோட்டில் நீரோடை செல்லும் பாலத்தின் மேல் இரவு படுத்து உறங்கி உள்ளார்.

    அப்போது குடி போதையில் நீரோடையில் தவறி விழுந்துள்ளார். குடிபோதையில் இருந்த அவரால் நீந்த முடியவில்லை. இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • திண்டுக்கல் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி :

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 42). கூலித் தொழிலாளி. இவர் செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பைக்கில் வந்தார்.

    வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் கருப்பணசாமி கோவில் அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திண்டுக்கல் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயர்மின் அழுத்த வயரில் உரசியதில மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மேட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி என்ற சிங்காரவேலன் (வயது 42). கட்டிட கூலி தொழிலாளி யான இவர் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை பகுதியில் உயர் மின் அழுத்த வயர் செல்வதை கவனிக்காமல் கீழே இருந்த கம்பியை மேல் நோக்கி தூக்கினார்.

    அப்போது உயர்மின் அழுத்த வயரில் பட்டு மின்சாரம் தாக்கி வீசப்ப ட்டார். சக தொழிலாளர்கள் மீட்டு அருகில் உள்ள தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் எனக்கூறினர். பிரேத பரிசோதனைக்காக தேனி க. விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் அவரது உடல் கொண்டு செல்ல ப்பட்டது.

    தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு ள்ளனர். மின்சாரம் தாக்கி இறந்த பாண்டிக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×