என் மலர்
நீங்கள் தேடியது "பிக்சல்"
- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்குவது பற்றி கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
- தற்போது இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்கும் திட்டத்தில் கூகுள் மாற்றங்களை செய்து இருக்கிறது.
இந்திய சந்தையில் 5ஜி கனெக்டிவிட்டி இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது. 5ஜி வெளியீட்டை தொடர்ந்து கூகுள் நிறுவனம், பிக்சல் ஸ்மார்ட்போன்களில் 5ஜி சப்போர்ட் வழங்குவதற்காக இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அறிவித்தது. எனினும், எப்போது இதற்கான அப்டேட் வழங்கப்படும் என எவ்வித தகவலையும் வழங்கவில்லை. தற்போது இதற்கான பதிலை கூகுள் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி பிக்சல் 6a, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 5ஜி சப்போர்ட் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது. "5ஜி சேவையை வழங்கும் விவகாரத்தில் இந்திய டெலிகாம் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 6a மாடல்களுக்கு 2023 முதல் காலாண்டு வாக்கில் அப்டேட் வழங்க திட்டமிட்டுள்ளோம்," என கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த முறையும் சரியான வெளியீட்டு விவரத்தை கூகுள் தெரிவிக்கவில்லை. எனினும், 2023 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் பிக்சல் 6a, பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்காத சில நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் இருக்கிறது. தற்போது சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கிவிட்டன.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மற்றும் ஐபோன் SE 2022 மாடல்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கியது. இதுதவிர சியோமி நிறுவனம் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அப்டேட் வழங்கியது.
- கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஓஎஸ் பிக்சல் போன் பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது.
- பலக்கட்ட சோதனைக்கு பின் வெளியாகி இருக்கும் புது ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை கொண்டிருக்கிறது.
பிக்சல் போன் வைத்திருப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் முற்றிலும் புதிய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 12 அக்டோபர் 19 ஆம் தேதி வரை வெளியிடப்படாமலேயே இருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு புது ஓஎஸ் அப்டேட் யாரும் எதிர்பாராத சமயத்தில் வெளியாகி உள்ளது.
பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு இந்த ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஏராளமான பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது.
தற்போது புது ஓஎஸ் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 பீட்டா 4.1 வெர்ஷனிலேயே கைரேகை சென்சார் அதிகளவு மேம்பட்டு இருப்பதை உணர முடிந்ததாக பலர் சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வந்தனர்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-இல் சில மூன்றாம் தரப்பு செயலிகளின் ஐகான்கள் போன் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. செயலிகள் எவ்வளவு தகவல்களை சேகரித்து இயக்குகின்றன என்பதை சிறப்பாக இயக்க முடியும். மேலும் குறிப்பிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் க்ளிப்-போர்டு ஹிஸ்ட்ரி போன்ற விவரங்களை சேகரிக்க முடியாது.