என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணக்கம்பாளையம் ஊராட்சி"
- ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருமாநல்லூர் :
திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் ஏ.டி காலனியில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, பொங்குபாளையம் ஊராட்சி அம்மன் நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, காளம்பாளையம் என்.எஸ்.பி.ராஜா கார்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கழிவுநீா் அதிகம் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்வது.
- மக்களிடம் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுக்க செய்வது.
திருப்பூர் :
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி பொன்விழா நகர் பகுதியில் தமிழக அரசின் "நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் கீழ் நீர் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பிரச்சாரம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார்.
இதில் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம், துணைத்தலைவா் வீரக்குமாா், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சொா்ணாம்பாள், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கீதா சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம் கூறியதாவது: -கணக்கம்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுநீா் அதிகம் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்வது, அப்பகுதியில் தொடா்ந்து சுகாதாரத்தை உறுதி செய்வது, மக்களிடம் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுக்க செய்வது. மேலும், மக்கும் குப்பைகளை அவா்களது வீடுகளிலேயே சிறு குழி எடுத்து, அதில் மக்க செய்து உரமாக பயன்படுத்த செய்வது என அறிவுறுத்தப்படும் என்றாா்.
இதையடுத்து பொன் விழா நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டு இயக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் திட்ட அலுவலர் ( மகளிர் திட்டம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம் ), ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ.), வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.), ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர், மேற்பார்வையாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சிகள் ) ஸ்ரீதர், லதா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் , அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஊராட்சியின் வரவு செலவு, சுகாதாரம் ,பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா திட்டம் ,கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, உழவர் நலத்துறை, குழந்தைகள் அவசர உதவி, வாக்காளர் பட்டியலில்ஆதார் எண் இணைத்தல், நியாய விலைக் கடைகளில் சமூக தணிக்கை ,நமக்கு நாமே திட்டம் குறித்து 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி நடத்தினார் . ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்