search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை கோவில்"

    • கிருஷ்ணரின் அவதாரங்களை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து கொண்டாடுகின்றனர்.
    • கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது.

    உடுமலை :

    உடுமலை, பெரியகடை வீதியில் உள்ள நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா துவங்கியது.

    நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஆவணி மாதம், கிருஷ்ணரின் அவதாரங்களை, ஒவ்வொரு நாளும் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து, கிருஷ்ணஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று துவங்கியது. செப்டம்பர் 2 ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாளான்று பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு காலை, 4 மணிக்கு கண்ணன் பிறந்த நாளையொட்டி, சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது. பெருமாளுக்கு சிவப்பு நிற பட்டுடுத்தி, மயிலிறகு சூடி, மலர் அலங்காரத்துடன் கோபால கிருஷ்ண அலங்காரத்தில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி மற்றும் சென்னியோங்கு பாசுரங்கள் சேவை நடந்தது.

    திரளான பக்தர்கள் பங்கேற்று, 'நாராயண நாமம்', கூறி வழிபட்டனர். தொடர்ந்து 'வெண்ணைய்த்தாழி கண்ணன்' அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், மற்றும் ஸ்ரீ ராமானுஜா சாரிடபிள் டிரஸ்டியினர் செய்திருந்தனர்.

    ×