என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைஷ்ணவ தேவி கோவில்"
- காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் சிறப்பு தரிசனத்துக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது.
- ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக இந்த சேவை தொடங்கப்படுகிறது.
ஜம்மு:
காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில் மிகவும் பிரபலமானது. அக்கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் தனது ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது.
ஜம்முவில் இருந்து சஞ்சி சாத்வரை ஹெலிகாப்டர் இயக்கப்படும். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோவில் அமைந்துள்ள பவனுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
சிறப்பு தரிசனம் முடித்து, அதே நாளில் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.35,000, அடுத்த நாள் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.50,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்நிலையில், மாதா வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாக அலுவக அதிகாரி அன்ஷுல் கர்க் கூறுகையில், ஜூன் 18 முதல் ஜம்மு மற்றும் வைஷ்ணவ தேவி கோவில் இடையே நேரடி ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறோம். தொகுப்பின் ஒரு பகுதியாக பேட்டரி கார் சேவை, முன்னுரிமை தரிசனம், பிரசாத் சேவா மற்றும் பைரோன் கோவிலுக்கு ரோப்வே போன்ற பிற வசதிகள் கிடைக்கும். இந்த தொகுப்பை எங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
- வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
- நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக கோவில் நிர்வாகம் தகவல்.
ரியாசி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாலை தொடங்கிய பலத்த மழை நள்ளிரவு வரை தொடர்ந்த போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்தனர். வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்ராவிலிருந்து கோவிலை நோக்கி பக்தர்கள் வருவது நிறுத்தப் பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் தலைமை செயல் அதிகாரி அன்ஷுல் கர்க் தெரிவித்தார்.அவசர தேவைக்காக பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்