என் மலர்
நீங்கள் தேடியது "ஜப்பான் அரசு"
- ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்புள்ளது.
- ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். 3500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானுக்கு மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கமானது உடனடியாக ஏற்படுவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் நான்கை பள்ளத்தாக்கில் நீண்ட நாட்களாக ஏற்பட கூடும் என்று அஞ்சப்படும் 'மெகா நிலநடுக்கம்' ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழக்கக் கூடும் என அந்நாட்டு அரசு பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும்.
- செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீத பயிர் கிடைக்கும் நிலையில் புதிய அறுவடை பருவம் தொடங்கியுள்ளது என்றார்.
நிலநடுக்கம் மற்றும் சூறாவளியால் அதிக அளவில் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று ஜப்பான்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சூறாவளியால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பிரதான உணவுகளில் ஒன்றான அரிசிக்கு முன்எப்போதும் இல்லாத வகையில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
டோக்கியோவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் கிளார்க், "இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். மேலும் அரிசி பைகள் விரைவாக விற்றுத் தீர்ந்துவிடும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மளிகை கடைக்காரர் ஒருவர், தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஒரு நாளைக்கு ஒரு பை அரிசி மட்டுமே வாங்கிக்கொள்ள அறிவிறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் "மெகா நிலநடுக்கம்" மற்றும் பல சூறாவளிகள் ஏற்படக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து மக்கள் தங்கள் வீடுகளில் அரிசியை வாங்கி வைக்கத் தொடங்கினர். ஜப்பான் முழுவதும் உள்ள கடைகளில் அரிசி இல்லாமல் போனது அல்லது அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் ஓபன் விடுமுறை.
இது தவிர, வெப்பமான காலநிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறைந்த அறுவடைகள், அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பதிவு எண்ணிக்கையுடன் தொடர்புடைய தேவை அதிகரித்தது, மேலும் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
அரிசி தட்டுப்பாடு தொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் டெட்சுஷி சகாமோடோ கூறுகையில், பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீத பயிர் கிடைக்கும் நிலையில் புதிய அறுவடை பருவம் தொடங்கியுள்ளது என்றார்.
- 2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் வரி வருவாயில் 3 சதவீதம் மது விற்பனையில் இருந்து வந்துள்ளது. இது 2020-ம் ஆண்டு 1.7 சதவீதமாக சரிந்தது.
- கொரோனாவுக்கு முன்பு பெரும்பாலானோர் பார்களுக்கு சென்று மது அருந்தி வந்தனர்.
டோக்கியோ:
ஜப்பானில் கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இளைஞர்களிடம் மது அருந்தும் பழக்கம் குறைந்து உள்ளது.
மூத்த தலைமுறையினரோடு ஒப்பிடும் போது இளைஞர்கள் குறைவாகவே மது அருந்துகின்றனர். இதனால் அரசுக்கு வரி வருவாயில் அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு இளைஞர்கள் மது அருந்துவதை குறைந்ததுதான் காரணம் என்பதை அந்நாட்டின் தேசிய வரி முகமை அமைப்பு கண்டறிந்தது.
ஜப்பானில் 1995-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 100 லிட்டர் மது அருந்தி வந்துள்ளார். 2020-ம் ஆண்டுக்கு ஒரு நபர் ஆண்டு 75 லிட்டர் மது அருந்தி உள்ளார்.
இதையடுத்து வரி வருவாயை பெருக்க இளைஞர்கள் அதிகளவு மது குடிக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதற்காக சேக் விவா என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரம் மூலம் குடிப்பழக்கத்தை இளைஞர்களிடம் பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
20 முதல் 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசனைகள் கேட்கப்பட்டு உள்ளன. மது விற்பனை அதிகரிக்க புதிய யோசனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த யோசனைகள் வழங்குபவர்களுக்கு பரிசு, விருது வழங்கப்படுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.
2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் வரி வருவாயில் 3 சதவீதம் மது விற்பனையில் இருந்து வந்துள்ளது. இது 2020-ம் ஆண்டு 1.7 சதவீதமாக சரிந்தது. கொரோனாவுக்கு முன்பு பெரும்பாலானோர் பார்களுக்கு சென்று மது அருந்தி வந்தனர்.
கொரோனாவுக்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரிந்ததால் வெளியில் சென்று மது அருந்துவது குறைந்தது. அந்த நிலை இளைஞர்களிடம் தொடர்ந்து வருகிறது. இதனால் இளைஞர்களிடம் மது குடிப்பதை அரசு ஊக்குவிக்கிறது.
பல நாடுகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மதுவை ஊக்குவிக்கும் ஜப்பான் அரசின் இந்தஅறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த முடிவுக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.