என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ்- லாரி மோதல்"
- அரசு பஸ்- லாரி மோதல்; 32 பயணிகள் உயிர் தப்பினர்.
- எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்தூர்-மதுரை நெடுஞ்சாலையில் அதிகாலை 5.30 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. இதில் 32 பயணிகள் இருந்தனர்.
எதிர்திசையில் மதுரை யில் இருந்து தேவ கோட்டை நோக்கி சரக்கு லாரி அதி வேகமாக வந்தது. எஸ்.எஸ்.கோட்டை சிவல்பட்டி பிரிவு அருகே வந்தபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது.
இருப்பினும் அரசு பஸ் டிரைவர் சேகர் சுதாரித்துக் கொண்டு சாதுரியமாக செயல்பட்டதால் சாலையோர தடுப்பில் மோதி பஸ் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த 32 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய லாரியின் முன்பகுதி நொறுங்கியது. சரக்கு லாரியின் டிரைவர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தின் வழியாக அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் காரில் தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் விபத்து நடந்திருப்பதை பார்த்தவுடன், தனது காரில் இருந்து இறங்கிச்சென்று அரசு பஸ்சின் டிரைவர் சேகர் மற்றும் கண்டக்டரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் நிலை தடுமாறி அந்த லாரியின் வலது புறத்தில் மோதி மீண்டும் மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதியது.
- விபத்தால் சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
சென்னையில் இருந்த தேனிக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் கருப்புசாமி ஓட்டி வந்தார். இந்த பஸ் நேற்று இரவு 4 மணி அளவில் விக்கிரவாண்டி அருகே சுங்கச்சாவடி அருகே உள்ள அழுக்கு மேம்பாலம் மேலே சென்று கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பே சென்று கொண்டிருந்த ஒரு டிப்பர் டாரஸ் லாரி திடீரென இடது புறத்தில் இருந்து வலது புறம் வந்தது. அப்போது பின்னால் சென்ற பஸ் நிலை தடுமாறி அந்த லாரியின் வலது புறத்தில் மோதி மீண்டும் மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில்மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்பஸ் டிரைவர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி, பஸ்சில் பயணம் செய்தபயணிகள் கோவி ந்தராஜ், ராஜமாணிக்கம், ராஜாமணி, கண்ணன், ஜெயஸ்ரீ ,மீரா ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்டவர்கள் உடனடியாக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து ஏற்பட்ட வாகனங்களை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்