search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரண் ரிஜிஜூ"

    • எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார்
    • கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர்

    பாராளுன்றத்தில் நேற்று நடத்த மக்களவைக் கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய பாராளுமன்ற மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி தூங்கும் நிலையில் அமர்த்திருந்தார். இதனைப் பார்த்த கிரண் ரிஜிஜூ தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ராகுல் காந்தி தூங்குவதைச் சுட்டிக்காட்டினார்.

    உடனே, கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் வெடித்துத் சிரிக்கத் தொடங்கினர். ராகுல் காந்தி தூங்கும் நிலையில் உள்ள அந்த வீடியோவையும் புகைப்படத்தையும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றன. ராகுல்காந்தி கண்களை மூடியபடி அமர்த்திருந்தாரா அல்லது தூங்கிக்கொண்டிருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.   

    முன்னதாக நாட்டில் உள்ள பல்வேறு சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது, வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதல் உள்ளிட்ட 44 திருத்தங்களை வக்பு சட்டத்தில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன

    • நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.
    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துக்கள் 'வக்பு சொத்துக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த சொத்துக்களை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.

    நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில் 8 லட்சத்து 72 ஆயி ரத்து 292 சொத்துகள் இருக்கின்றன. அந்த சொத்துக்களை வக்பு வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    வக்பு வாரியத்தின் கீழ் மாவட்ட வக்பு குழுக்கள் செயல்படுகின்றன. குறிப்பாக வக்பு சொத்துக்கள் சுமார் 200 பேரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வக்பு வாரியங்களை கண்காணிக்க, வக்பு சட்டத்தின்படி, மத்திய வக்பு கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது.

    மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது.

    இந்நிலையில், வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுனர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

    இதையடுத்து அந்த மசோதாவின் நகல்கள் பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் என்னென்ன விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

    நாட்டில் உள்ள பல்வேறு சொத்துக்களுக்கு உரிமை கோரும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைகுறைப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சட்டத்திருத்த மசோதாவில், வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்பு கவுன்சிலில் ஒரு மத்திய மந்திரி, 3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் (ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டு), தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்தியஅரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர்.

    இதில் 2 பேர் கண்டிப்பாக பெண்களாக இருக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும், புதிய மசோதாவில் வக்பு சொத்துக்களை சர்வே செய்யும் அதிகாரம் மாவட்ட கலெக்டருக்கோ அல்லது அவருக்குக் கீழ் இருக்கும் துணை கலெக்ட ருக்கோ வழங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அதுமட்டுமின்றி போராஸ், அகாகனிஸ் ஆகிய பிரிவுகளுக்கென தனி சொத்து வாரியம் அக்ப் உருவாக்கப்பட்டு அதில் ஷியாஸ், சன்னி, போராஸ், அகாகனிஸ் மற்றும் பிற இதர பிற்படுத்த முஸ்லிம் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வக்பு என்பதற்கான தெளிவான விளக்கம் மசோதாவில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுபவராகவும், வக்பு சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்கும் எந்த ஒரு நபரும் வக்பு உறுப்பினர் ஆவார் என்று விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி வக்பு வாரிய சொத்துக்கள் பதிவை மத்திய வலைதளம் மற்றும் தரவு தளம் மூலம் முறைப்படுத்துவதே இந்த சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

    இதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் இன்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் வேணுகோபால், ஹிபி ஈடன் ஆகியோர் கொடுத்து உள்ள நோட்டீசில், "சொத்து உரிமை தொடர்பான சட்டத்தை திருத்துவது சட்ட விரோதம்" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் சட்டப்பிரிவு 25-ன்படி அடிப்படை உரிமையை இது பறிப்பதாக இருப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

    மேலும் இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் மாநில அரசு உரிமை பறிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "காவி கட்சி ரியல் எஸ்டேட் கம்பெனி போல செயல்பட தொடங்கி விட்டது. பா.ஜனதா என்பதை பாரதிய ஜமீன் கட்சி என்று சொல்லும் அளவுக்கு அது மாறி விட்டது. இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் சட்டத்திருத்த மசோதாவை தொடக்கத்திலேயே நாங்கள் எதிர்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் இன்று இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களுடன் ஆேலாசனையில் ஈடுபட்டார். அப்போது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தொடக்கத்தி லேயே எதிர்க்க முடிவு செய்யப்பட்டது.

    எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு உறுதியாக இருந்தது. பாராளுமன்றம் கூடியதும் இந்த சட்டத்திருத்த மசோதாவை சிறுபான்மை விவகாரத்துறை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

    அதன்படி பாராளுமன்ற கூடியதும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அதன் மீது காங்கிரஸ் எம்.பி.வேணுகோபால் பேசினார். அப்போது சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
    • மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்தார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அவர் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற ஒப்புதல் அளித்தார்.

    அதன்படி புதிய சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மத்திய கலாசாரத்துறை இணை மந்திரியாக இருந்த அவருக்கு தற்போது சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும்.
    • ஆனால் வெளிநாட்டினருக்கு தெரியாது என மத்திய மந்திரி ரிஜிஜூ தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து, லண்டன் நகரில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தது.

    இந்நிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியில் தன்னை இளவரசராக அறிவித்துக் கொண்ட ராகுல் காந்தி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார்.

    இந்தியாவின் ஒற்றுமைக்கு தீவிர ஆபத்து நிறைந்த மனிதராக அவர் மாறி இருக்கிறார். அவர் தற்போது இந்தியாவை பிரிக்க மக்களைத் தூண்டிவிடும் வேலையை செய்துவருகிறார்.

    இந்தியாவின் மிக பிரபலம் வாய்ந்த மற்றும் அன்பு செலுத்தப்படுகிற மதிப்புமிக்க பிரதமர் மோடியின் ஒரே மந்திரம் என்னவென்றால் ஒரே இந்தியா, வளர்ச்சிக்கான இந்தியா என்பதே ஆகும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், மற்றொரு டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும். ஆனால் வெளிநாட்டினருக்கு உண்மையில் ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது தெரியாது. அவரது முட்டாள்தன பேச்சுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால், அவரது இந்திய எதிர்ப்பு பேச்சுகள், இந்தியாவின் மீதுள்ள பொதுவான எண்ணத்திற்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    • பிரதமருக்கு எதிராக பேசினால் கைது செய்து சிறையில் தள்ளுவார்கள் என முன்னாள் நீதிபதி பேச்சு
    • காங்கிரசால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பற்றி அவர்கள் ஒருபோதும் பேசமாட்டார்கள் என மத்திய மந்திரி காட்டம்

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா (ஓய்வு) தேசிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, கருத்து சுதந்திரம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    'இன்று நிலைமை மோசமடைந்து காணப்படுகிறது. ஒரு பொது இடத்தில் நின்றுகொண்டு, எனக்கு பிரதமரின் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை என கூறினால், சிலர் எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்து, என்னை கைது செய்து, சிறையில் தள்ளலாம். இதனையே குடிமக்களாக நாம் அனைவரும் எதிர்க்கிறோம்' என்று முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறினார்.

    இதற்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    உண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி இதனை கூறினாரா? என எனக்கு தெரியாது. அவர் கூறியது உண்மையாக இருந்தால் அவரது பேச்சே அவர் பணியாற்றிய நிறுவனத்தை இழிவுபடுத்துவதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எந்த நேரமும் தடைகள் எதுவுமின்றி தரக்குறைவாக பேசுபவர்கள், கருத்து சுதந்திரம் இல்லை என்று கதறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பற்றி அவர்கள் ஒருபோதும் பேசமாட்டார்கள். சில மாநில கட்சி முதல்-மந்திரிகளை பற்றி விமர்சிக்க கூட ஒருபோதும் அவர்களுக்கு தைரியம் இல்லை.

    இவ்வாறு கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

    • இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இடையே ஒப்பிட வேண்டிய அவசியமில்லை.
    • ஆயுதப்படை தீர்ப்பாயத்திற்கு எந்த உதவியையும் வழங்க சட்ட அமைச்சகம் தயார்.

    நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியுள்ள நிலையில், ஒரு நீதிபதி 50 வழக்குகளை முடித்து வைத்து தீர்ப்பளித்தால், 100 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் செயல்பாடு குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் ரிஜிஜு, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துகிறது என்றார்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது ஒரு கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4.83 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறினார். கீழ் நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் 72,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

    மேலும், இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இடையே ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாடுகளுக்கு இடையே வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன என்று ரிஜிஜு கருத்து தெரிவித்தார்.

    5 கோடி மக்கள் தொகை கூட இல்லாத சில நாடுகள் இருக்கும் நிலையில் இந்தியாவில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.

    நீதியை விரைவாக வழங்குவதற்கு ஆயுதப்படை தீர்ப்பாயத்திற்கு எந்த உதவியையும் வழங்க சட்ட அமைச்சகம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

    ×