என் மலர்
நீங்கள் தேடியது "மதநல்லிணக்க நாள்"
- ஆகஸ்ட் 20-ந் தேதி மதநல்லிணக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- மாணவர்கள் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் மதநல்லிணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ பிரதிநிதி சுந்தரம் வரவேற்று பேசினார்.
அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கி பேசுகையில் , ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 20-ந் தேதி மதநல்லிணக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடத்திலே எந்த ஒரு பாகுபாடும் இருக்கக்கூடாது . அனைவரும் ஒருவரே.எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் .தங்களுடைய எதிர்காலத்திற்கு பாடுபட வேண்டும். ஒருமைப்பாட்டு என்பது மக்களிடம் மனதில் வரக்கூடிய ஒரு சிந்தனையாக இருக்க வேண்டும். மக்கள் மனதில் எழுப்ப வேண்டிய ஒரு உணர்வாக இருக்க வேண்டும்.இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் உணர்வுபூர்வமான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடவேண்டும் என்று கூறினார்.
பிறகு அலகு -2 மாணவர்கள், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற ஆடையணிந்தும் தேசிய கொடியை ஏந்தியும் அனைவரும் ஒருவரே என்பதை உணர்த்தும் வகையில் முகத்தில் வர்ணம் அடித்தும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைக் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முடிவில் மாணவ செயலர் அருள்குமார் நன்றி கூறினார். மாணவ செயலர்கள் பூபதிராஜா , பூபாலன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.