என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவுச் சாலை"

    • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தியது.
    • உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து

    212 கி.மீ நீளமுள்ள டெல்லி-டேராடூன் விரைவுச் சாலைப் பணியை முடிக்க அப்பகுதியில் அமைந்துள்ள இடத்தில 1,600 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீடு தடையாக உள்ளது.

    1998 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச வீட்டுவசதி வாரியம் தனது நிலத்தை கையகப்படுத்த முயற்சித்ததை எதிர்த்து வீர்சென் சரோஹா என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றம் வீர்சென் சரோஹாவிற்கு சாதகமாக தீர்ப்பளித்தது.

    இப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக அவரது நிலத்தை கையகப்படுத்தியதால், வீர்சென் சரோஹாவின் பேரன் லக்ஷயவீர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து. ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

    இந்த விரைவுச் சாலை கட்டி முடிக்கப்பட்டவுடன், டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விரைவுச் சாலை அமையும் பகுதியில் விவசாயி சுக்விந்தர் சிங்கின் புதிய வீடு இருந்தது.
    • சாலையில் இருந்து 500 அடி தூரத்திற்கு வீட்டை நகர்த்தும் பணி நடைபெற்றது.

    பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகி, தனது சொந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 அடுக்குமாடி வீடு கட்டி இருந்தார். இந்நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை இணைக்கும் வகையில் விரைவுச் சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

    இதில் டெல்லி- பஞ்சாப் மாநிலம் வழியாக அமைக்கப்படும் விரைவுச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் விவசாயி சுக்விந்தர் சிங் கட்டியிருந்த வீடு சிக்கியது. இதையடுத்து அவரது வீட்டை அகற்றுமாறு பஞ்சாப் அரசு உத்தரவிட்டதுடன் இதற்காக இழப்பீடும் வழங்கியது.

    ஆனால் தனது கனவு வீட்டை இடிக்காமல் அதை அங்கிருந்து நகர்த்த முடிவு செய்த விவசாயி சுக்விந்தர் சிங், தனியார் நிறுவனத்தை அணுகினார். இதையடுத்து அவரது வீட்டின் அஸ்திவார பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் இருந்து 500 அடி தூரத்திற்கு நகர்த்திச் செல்லும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

    இது குறித்து சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாவது: டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் வழியில் வருவதால் நான் வீட்டை மாற்றுகிறேன். எனக்கு இழப்பீடு வழங்கப்பட்டது, ஆனால் வேறு வீடு கட்ட விரும்பவில்லை. இந்த வீட்டை கட்ட சுமார் 1.5 கோடி ரூபாய் செலவழித்துள்ளேன். தற்போது 250 அடி வரை வீடு நகரத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×