என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யோகேந்திர உபாத்யாய்"
- இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் உத்தரவு.
- கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஆக்ரா:
உத்தரபிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாய், ஆக்ரா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்ற போது கல்லூர் கேட் மூடப்பட்டிருந்தது. கல்லூரி வாசலில் அமைச்சர் 15 நிமிடங்கள் காத்திருந்தார். எனினும் கேட் திறக்கப்படாததால் வெறுப்படைந்த அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்றார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் உத்தர விட்டுள்ளதுடன், கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கல்லூரி ஓவியத்துறை ஆசிரியர்களால் தனியாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கல்லூரி முதல்வர் அனுராக் சுக்லா தெரிவித்தார். தேர்வு நடைபெற்று வந்ததன் காரணமாக கல்லூரி வளாகத்தில் வாகனங்கள் அதிக அளவில் இருந்ததாகவும், குளறுபடிகள் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.