search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலாலய பூைஜ"

    • கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலய பூைஜ நடந்தது.
    • சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி, 190 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி மாத ரோகினி நட்சத்திரத்தில் இந்த இடத்தில் ஜீவசமாதியாக அமர்ந்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாத சுவாமி ஜீவசமாதி பீடத்தில் இன்று கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலய பூைஜ நடந்தது.

    இந்த நகரில் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கண்கண்ட தெய்வமாக விளங்கிய சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி, 190 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி மாத ரோகினி நட்சத்திரத்தில் இந்த இடத்தில் ஜீவசமாதியாக அமர்ந்தார்.

    வழிபாட்டுத் தலமாக மாறிய இந்த ஜீவசமாதி பீடத்தில் 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேக பணிகளுக்கான பாலாலய பூைஜ இன்று காலை 6 மணி அளவில் தொடங்கியது. யாக வேள்விகள் 10 மணி வரை நடந்தன.

    பூஜையில் கலசு ஸ்தாபனம் செய்யப்பட்டு தெய்வ சக்திகள் கலசம் பிரவேசிக்க பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து பூர்ணா குதியுடன் பூஜை நிறைவு பெற்று தீப ஆரத்தி நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் சித்தர் முத்து வடிவ நாதர் சுவாமியின் வம்சாவளியினர், வணிகர் நல சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். யாக வேள்விகளை தலைமை சிவாச்சாரியார் சின்னையா தலைமையில் 15-க்கும மேற்பட்டோர் நடத்தினர். திருப்பணிகள் தொடங்கி முடிந்தவுடன் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×