search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோரம்தங்கா"

    • 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.

    மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலை ஐசால் வடக்கு-II தொகுதிக்குட்பட்ட 19-ஐசால் வெங்லாய்-I ஒய்.எம்.எம். ஹாலில் அமைக்கப்பட்டிருந்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அப்போது, வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகள் கோளாறை விரைவாக சரி செய்து விடுவோம். இதனால் சற்று காத்திருங்கள் என முதல்வரிடம் கூறினர். இதனால் முதல்வர் ஜோரம்தங்கா காத்திருந்தார்.

    இருந்தபோதிலும் அதிகாரிகளால் உடனடியாக கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் முதல்வர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் வந்து வாக்களிக்க இருப்பதாக தெரிவித்தார்.

    • மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் இருந்து வருபவர் ஜோரம்தங்கா.
    • டாக்டரை மகள் தாக்கியதற்கு முதல் மந்திரி பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    ஐஸ்வால்:

    மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

    மிசோரம் முதல் மந்திரியின் மகள் மிலாரி சாங்டே. இவர் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.

    முன் அனுமதி இல்லாததால் மருத்துவர் முதல் மந்திரியின் மகளைச் சந்திக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மகள் டாக்டரை தாக்கியுள்ளார். இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்த வீடியோ வைரலானதால் முதல் மந்திரி மற்றும் மகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், முதல் மந்திரி ஜோரம்தங்கா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஐஸ்வாலை சேர்ந்த தோல் நிபுணரிடம் தனது மகள் தவறாக நடந்ததற்கு மன்னிப்பு கேட்பதாகவும், அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

    ×