என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுபிஐ பண பரிவர்த்தனை"

    • சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.
    • பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை.

    2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை.

    2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என பரவும் தகவல் பொய்யானது.

    யுபிஐ வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடர்ந்து உறுதி பூண்டுள்ளோம்" என குறிப்பிட்டுள்ளது.

    யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் நாம் பணப்பரிமாற்றம் செய்யும்போது தற்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை.

    ஆனால் இனி வரும் காலத்தில் யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் ரூ.600 கோடி பரிவர்த்தனை.
    • யுபிஐ சேவை நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தல்.

    வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக பெட்டி கடைகள் உள்பட சிறு வியாபாரிகளிடமும் கூட பொதுமக்கள் ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் யுபிஐ முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றது.

    இந்நிலையில் ஆன் லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. யுபிஐ மூலமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி, பங்குதாரர்களிடம் கருத்து கோர உள்ளதாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை சேவை தொடர்பான குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

    ×