என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூய்மைப்பணியாளா்கள்"
- தெக்கலூா் ஊராட்சியில் 18 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்
- நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.
அவிநாசி :
அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூா் ஊராட்சியில் 18 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் குறைவான ஊதியம் வழங்குவதுடன், மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இது குறித்து தெக்கலூா் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது:- தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக தெக்கலூா் ஊராட்சியில் வழங்கப்பட்டு வருகிறது.அதிலும் மாத ஊதியத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை குறைத்து வழங்குகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) விஜயகுமாரிடம் கேட்டபோது, தெக்கலூா் ஊராட்சியில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களில் விடுப்பு எடுத்தவா்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறேன். தூய்மைப் பணியாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
- காங்கயம் நகர பகுதியில் வீடுவீடாக கழிவுகள் சேகரிப்பு சிறப்பு பணி நடைபெற உள்ளது.
- புகையில்லா போகியை நடைமுறைப்படுத்த காங்கயம் நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
போகிப் பண்டிகையை முன்னிட்டு தீயிட்டு எரிக்கப்படும் பொருட்களை எரிக்காமல் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு காங்கயம் நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜனவரி 14ந் தேதி போகிப் பண்டிகை நாளில் வீடுகளில் இருக்கும் பழையப் பொருட்கள், டயா்கள் மற்றும் பயனில்லாத பொருட்களை தீயில் எரித்து சுகாதார சீா்கேடு ஏற்படுத்தாமல், நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கவும்.
இதற்காக காங்கயம் நகர பகுதியில் வீடுவீடாக கழிவுகள் சேகரிப்பு சிறப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக சுகாதார வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வாகனங்கள் மூலம் வீடுவீடாக குப்பை சேகரிக்கும்போது அவா்களிடம் போகிப் பண்டிகைக்காக தீயிட்டுக் கொளுத்த நினைக்கும் பழைய பொருட்களை ஒப்படைத்து இந்த ஆண்டு புகையில்லா போகியை நடைமுறைப்படுத்த காங்கயம் நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும்.
- மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும்.
அனுப்பர்பாளையம் :
திருமுருகன்பூண்டி நகராட்சி ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும். தற்காலிக ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள கூலி உயா்வை திருமுருகன்பூண்டி நகராட்சியில் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து சங்கத்தின் புதிய தலைவராக பி .சுப்பிரமணியம், செயலாளராக லோகநாதன், பொருளாளராக விஜயராணி, துணைத் தலைவராக ஆனந்தன், துணைச் செயலாளராக வீரன் உள்பட 16 போ் கொண்ட கமிட்டி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
சிஐடியூ. மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்க மாவட்ட நிா்வாகி பழனிசாமி, விவசாய சங்க மாவட்ட நிா்வாகிகள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம், சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்