என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 259349
நீங்கள் தேடியது "வழுக்கு மரம் ஏறுதல்"
- கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது.
- 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம் பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது.
அவினாசி :
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு அவினாசியில் உள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவில் முன் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி திருவிழா நடந்தது. கோவில் முன் 30 அடி மூங்கில் நடப்பட்டு அதன் உச்சியில் ரூ. 2 ஆயிரம்பணமுடிப்பு கட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை 7 மணி முதல் ஏராளமான வாலிபர்கள் தொடர்ந்து வழுக்குமரம் ஏறி இரவு 9 மணியளவில் பணமுடிப்பை அவிழ்த்து எடுத்தனர்.
இதையடுத்து நடந்த உறியடி திருவிழாவில் திரளானோர் கலந்துகொண்டு உறி அடித்தனர்.முன்னதாக நேற்று காலை கரிவரதராஜப்பெருமாளுக்கு விசேச பூஜை திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. இரவு 9.30 மணியளவில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
×

X