என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாட்டு சாணம்"
- நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
- அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).
இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.
இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாட்டு சாணம் மூலம் தான் தயாரித்த பொருட்களை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்.
- ஆலையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பீம்ராஜ். பல ஆண்டுகளாக அச்சகம் நடத்தி வரும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு மாட்டு சாணத்தில் இருந்து காகிதம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தனது திட்டத்தில் பின் வாங்காத அவர் மீண்டும் சாணத்தில் இருந்து காகிதம் தயாரித்து சந்தைப்படுத்தினார்.
மாட்டு சாணம் மூலம் டைரி, காலண்டர், பைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப் பத்தியதோடு அதற்கான காப்புரிமையையும் பெற்றார். நாளடைவில் இவரது பொருட்களுக்கு அமோக வரவேற்பு ஏற்பட்டது. இதனால் சாணம் மூலம் தான் தயாரித்த பொருட்களை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார். தற்போது இவர் நடத்தி வரும் ஆலையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
- எரிவாயு தயாரிப்புக்கு தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும்.
- இந்த திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்.
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லா பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாட்டு சாணத்தைக் கொண்டு உயிரி வாயு தயாரிக்கும் திட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனமான ஹெச்.பி.சி.எல். ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோரில் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான பூமி பூஜை, ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் பத்மேடா கிராமத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. கழிவிலிருந்து மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல்-ன் முதல் திட்டம் இதுவாகும்.
உயிரி எரிவாயு தயாரிக்க இந்த நிலையத்தில் தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும். இதிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம். இத்திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்.
கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் படியும், மத்திய அரசு தொடங்கியுள்ள கோபர்தன் திட்டத்தின் கீழும், இந்தத் உயிரி வாயு தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்