search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிட்ஷாட்"

    • பிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில் பெரிய ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • மேலும் இதில் சோலோ சின்க் தொழில்நுட்பம், மேம்பட்ட ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    பிட்ஷாட் நிறுவனத்தின் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 1.8 இன்ச் AMOLED காஸ்மிக் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கிடைக்கும் பெரிய ஸ்கிரீன் ஸ்மார்ட்வாட்ச்களில் இதுவும் ஒன்று ஆகும்.

    புதிய பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அட்வான்ஸ்டு ப்ளூடூத் காலிங் மற்றும் சோலோசின்க் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இன்பில்ட் ஸ்பீக்கர், மைக், ரேபிட் டயலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ச்-ஐ ஹவோபிட் (HaWoFit) செயலியுடன் சின்க் செய்து கொள்ளலாம்.


    இதில் 1.8 இன்ச் AMOLED காஸ்மிக் டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இதன் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ 70 சதவீதம் ஆகும். இதில் 368x448 பிக்சல் ரெசல்யூஷன், 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 560 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. இதில் பெரிய சதுரங்க வடிவம் கொண்ட டயல் மற்றும் பக்கவாட்டில் ரோடரி பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், பில்ட்-இன் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஸ்டெப் கவுண்ட்டர் என ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு ஸ்டான்ட்-பை கிடைக்கும். இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் உள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

    ×