என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அத்திக்கடவு - அவிநாசி திட்டம்"
- மிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
- திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.
அவினாசி :
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்ற பெயரில் அத்திக்கடவில் இருந்து அவினாசிக்கு வாய்க்கால் வெட்டி, அதன்மூலம் வறண்ட பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளை நீரால் நிரப்பும் திட்–டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் அறிவிப்பாகவே பல ஆண்டுகளாக இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
அத்திக்கடவில் இருந்து கால்வாய் வெட்டுவதற்கு பதிலாக, ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம், காலிங்கராயன் அணைக்கட்டை ஒட்டிய பகுதியில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீர் எடுக்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குட்டை, குளங்களில் நீர் நிரப்பும் வகையில் இந்த பணி தொடங்கியது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதும், இந்த பணியை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதுமட்டுமின்றி திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடாக ரூ.1,756 கோடியே 88 லட்சம் அனுமதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவை 15 ஏரிகள், 243 குட்டைகள் என 258 நீர்நலைகள், திருப்பூரில் 43 ஏரிகள், 385 குட்டைகள் என 428 நீர்நிலைகள், ஈரோடு மாவட்டத்தில் 16 ஏரிகள், 343 குட்டைகள் என்ற 359 நீர்நிலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப்பட்டன. இதன் படி நீர்வளத்துறை ஏரிகள் 32, ஒன்றிய ஏரிகள் 42, குட்டைகள் 971 என மொத்தம் 1,045 நீர்நிலைகள் மூலம் நிலத்தடி நீர் செறிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 24 ஆயிரத்து 487 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். ஈரோட்டில் மட்டும் 8 ஆயிரத்து 767 ஏக்கர் பயன்பெற உள்ளது.
ஏரி–கள் குளங்களை இணைக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பவானி ஆற்று உபரி தண்ணீரை நீரேற்றம் செய்ய பவானி காலிங்கராயன்பாளையம், நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என 6 இடங்களில் தலைமை நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீரேற்று நிலையங்களை இணைக்கும் பிரதான குழாய்கள் 106.8 கிலோ மீட்டர் அளவுக்கும், ஏரிகள், குளங்களை இணைக்கும் கிளை குழாய்கள் 958.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட உள்ளன.
சுமார் 6 மாத காலமாக திட்டப்பணிகள் எப்போது முடியும் என்ற கேள்வி இருந்த நிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார்.
பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:- அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் 99 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. முன்னதாகவே இந்த பணிகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். ஆனால் உபரி நீர் வருகை குறைவாக இருந்ததால் சோதனை ஓட்டம் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இன்னும் 5 நாட்களில் தேவையான அளவு உபரி நீர் கிடைக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே சோதனை ஓட்டப்பணிகள் விரைவாக முடிக்கப்படும். இதன் மூலம் அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
சோதனை ஓட்டமானது ஒவ்வொரு தலைமை நீரேற்று நிலையம் வாரியாக நடைபெறுகிறது. அந்தந்த பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் செலுத்தி, கசிவுகள், உடைப்புகள் சரி செய்யப்பட்டு முழுமை செய்யப்படுகின்றன. தற்போதைய திட்டத்தின் படி 1045 குளம், ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட குளங்களில் தடையின்றி தண்ணீர் சேர்க்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இன்னும் கூடுதலாக குளங்களை இந்த திட்டததில் சேர்க்க கோரிக்கைகள் வரப்பட்டு இருக்கின்றன. இதற்காக தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்து வருங்காலங்களில் நீட்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
- 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
- 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அவினாசி :
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ங்களில் 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும் என திட்ட இயக்குனர் சிவலிங்கம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, 1.065 கி.மீ.,க்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.5 இடங்களில் ெரயில்வே பாதையின் குறுக்கேயும், 10 இடங்களில் தேசிய நெடு ஞ்சாலையின் குறுக்கேயும் சுரங்கம் அமைத்து அதில் குழாய்கள் பதிக்கப்ப ட்டுள்ளன.இதில் 800 கி.மீ.,க்கு, கெட்டித்தன்மை உடைய இரும்பு குழாய்கள், 265 கி.மீ.,க்கு கடினமான பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரின் அழுத்தத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் திறந்து விட 1,295 இடங்களில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட உள்ளது. இதில் 37 பொதுப்பணித்துறை குளங்கள், 47 ஊராட்சி குளங்கள், 971 கிராம குட்டைகள் அடங்கும். 6 இடங்களில் தானியங்கி நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓராண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே இத்திட்டத்தால் தண்ணீர் பம்பிங் செய்ய ப்படும். நாள் ஒன்றுக்கு 250 கன அடி வீதம் மொத்தமாக 1.5 டி.எம்.சி., தண்ணீர் பம்பிங் செய்து குளம், குட்டைகளுக்கு நிரப்பப்ப டும். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களில் நீருற்று வாயிலாக 24 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும்.திட்டப் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. பிப்ரவரி 20-ந்தேதி வெள்ளோட்ட பணிகள் துவங்கின. ஒவ்வொரு பகுதி யாக வெள்ளோட்டம் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
- சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.
அவிநாசி :
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. இதில் 32 பொதுப்பணித்துறை குளம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டு 42 குளங்கள், கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 971 குட்டைகள் என 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.தேர்வு செய்யப்பட்டுள்ள குளம், குட்டைகளில் சோலார் ஆற்றலில் இயங்கும் சென்சார் அவுட்லெட் சிஸ்டம் எனப்படும் உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 1,045 குளம் குட்டைகளில் 947 குளம், குட்டைகளில் இந்த உபகரணம் பொருத்தப்பட்டு விட்டது.இதன் மூலம் ஒரே இடத்தில் இருந்தபடியே குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள முடியும். திட்டப்பணி 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீர் செறிவூட்டப்பட வேண்டிய குளம், குட்டைகளை தூர்வாருவதுடன் அதில் செறிவூட்டப்படும் தண்ணீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சுக்குழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் கூறியதாவது:-அத்திக்கடவு நீர் செறிவூட்டப்பட உள்ள பெரும்பாலான குளம், குட்டைகள் புதர்மண்டிக் கிடக்கின்றன. குளம், குட்டைகளில் நிரம்பும் தண்ணீர், வெயில் காலங்களில் விரைவில் ஆவியாகிவிடும் என்பதால் அக்குளம், குட்டைகளை தூர்வாரி தேங்கும் நீரை நிலத்தடிக்குள் செலுத்தும் வகையில் உறிஞ்சு குழிகளை அமைக்க வேண்டும்.அந்தந்த கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளம், குட்டைகளில், 100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பணிகளை மேற்கொண்டால், செறிவூட்டப்படும் தண்ணீர் நிலத்தடியை சென்றடையும்.குறைந்தபட்சம் பொதுப்பணித்துறை குளங்களிலாவது இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்