search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பில்கிஸ் பானு வழக்கு"

    • குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
    • கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார்

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்" என உத்தரவிட்டது.

    இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.

    இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான, ரமேஷ் பாய் சந்தனா, மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்க வசதியாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் 10 நாட்கள் பரோல் கேட்டு கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், இன்று அவருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 குற்றவாளிகளில் ஒருவர், தனது மாமனாரின் இறப்புக்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார். பிரதீப் மோதியா என்ற குற்றவாளி, கடந்த பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது. ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அத்தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், குஜராத் அரசு குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் தேவையற்றவையாகும். மேலும் அவை குஜராத் அரசு மீது தப்பெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன் என்று சகோதரி பில்கிஸ் பானு கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.
    • அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

    தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

    "நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்" என்று சகோதரி பில்கிஸ் பானு கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

    நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள் என கூறினார்.

    • 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து குஜராத் மாநிலம் உத்தரவிட்டது.
    • வழக்கு விசாரணை நடைபெற்றது மகாராஷ்டிரா மாநிலம் என்பதால், அம்மாநில அரசுதான் உத்தரவு பிறப்பிக்க முடியும்.

    பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் மாநில அரசால் 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குஜராத் அரசு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்.

    வழக்கு விசாரணை நடைபெற்றது மகாராஷ்டிரா மாநிலம். வழக்கு விசாரணை நடைபெற்று தண்டனை அறிவிக்கப்பட்ட மாநிலம்தான் குற்றவாளியின் மன்னிப்பு மனுவை விசாரிக்கும் தகுதியுடையது.

    அதனால் மகாராஷ்டிர மாநில அரசுதான் உத்தரவு பிறப்பிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாகரத்னா, உஜ்ஜல் புயன் நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் 11 பேரும் கடந்த 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி குஜராத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகரத்தினா, உஜ்ஜால் புயான் ஆகியோர் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரணை மேற்கொண்டது.

    இந்த விசாரணையில் குஜராத் அரசு தரப்பில், கடந்த 2008-ம் ஆண்டு தண்டனை பெற்ற 11 பேரும் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். 1992-ம் ஆண்டில் தண்டனை குறைப்பு விதிகளின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அவர்கள் எந்த விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்? ஏற்கனவே தண்டனை குறைப்பு செய்யப்பட்ட பிறகு மீண்டும் எப்படி தண்டனை குறைப்பு செய்யப்பட்டது?

    1992-ம் ஆண்டு தண்டனை குறைப்பு கொள்கை எந்த அளவுக்கு மற்ற கைதிகளுக்கு பயன்பட்டது என்றும், இது எவ்வளவு தூரம் செயல்படுத்தப்படுகிறது என்றும், இது சம்பந்தமான தெளிவான தகவல்களை தர வேண்டும் என்றும் குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

    • கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவரது குடும்பத்தினரை கொலை செய்தது
    • உத்தரவை மறு ஆய்வு செய்யும்படி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு கடந்த 13ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

    புதுடெல்லி:

    குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும், தண்டனைக் காலம் முடியும் முன்பே நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில், பில்கிஸ் பானு தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களில் ஒரு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான மனுவை பரிசீலனை செய்யும்படி குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 13ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும்படி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு கடந்த 13ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான தகவலை பில்கிஸ் பானுவின் வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்ற உதவி பதிவாளர் அனுப்பியிருக்கிறார். இது பில்கிஸ் பானுவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவரது மற்றொரு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    • நீதிபதி விலகியதையடுத்து வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் நிலை உருவானது.
    • புதிய அமர்வு அமைக்கப்பட்டு அதன்பிறகே விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும், தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி பேலா திரிவேதி நேற்று திடீரென விலகினார். இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் நிலை உருவானது. நீதிபதி விலகியதையடுத்து புதிய அமர்வு அமைக்கப்பட்டு அதன்பிறகே விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் கொண்ட அமர்வில் ஆஜராகி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பேலா திரிவேதி விலகியதால் புதிய அமர்வை விரைவில் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதைக் கேட்ட தலைமை நீதிபதி, "மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும். தயவு செய்து ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப குறிப்பிடாதீர்கள். மிகவும் எரிச்சலூட்டுகிறது" என்றார். 

    • பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    • அரசியல் சட்டம்தான் நீதிக்கான போராட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் அளிக்கிறது.

    புதுடெல்லி :

    கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரை குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி விடுதலை செய்தது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்று வெற்று கோஷம் எழுப்புபவர்கள், கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். இது, பெண்களின் மரியாதை, உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில், ''11 கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலையில் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. அரசியல் சட்டம்தான் நீதிக்கான போராட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் அளிக்கிறது. பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    • பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் பயத்துடன் வாழும் பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்.
    • பில்கிஸ் பானு மட்டுமல்ல எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு அரசியலுக்கு அப்பாற்பட்டு தனது கருத்துக்களை துணிச்சலுடன் சொல்லக்கூடியவர்.

    அந்த வகையில் குஜராத்தில் கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்கட்சிகள் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குஷ்புவும் இதை கடுமையாக எதிர்த்துள்ளார்.

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. அப்போது ரந்திக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது.

    அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது கையில் வைத்திருந்த 2½ வயது குழந்தை உள்பட 7 பேரை கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 11 பேரும் ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலில் இருந்த னர்.

    அவர்களில் ஒருவர் தங்களின் தண்டனையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். சம்பவம் நடந்தது குஜராத் என்பதால் அந்த மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கோர்ட்டு கூறிவிட்டது. இதையடுத்து கருணை அடிப்படையில் அவர்களை குஜராத் அரசு விடுவித்தது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் பயத்துடன் வாழும் பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யக்கூடாது. அப்படி விடுவிக்கப்பட்டால் அது மனித குலத்துக்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம்.

    பில்கிஸ் பானு மட்டுமல்ல எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
    • இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    கடந்த 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளவும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    ×