search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருபானந்த வாரியார் 116-வது பிறந்த நாள் விழா"

    • கிருபானந்த வாரியார் உருவப்படத்தற்கு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
    • பின்னர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிசாமி கோயில் பின்புறம் உள்ள தட்சிணாமூர்த்தி மடத் தெருவில் பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் 116-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். ஊர்பிரமுகர்கள் குமார், டி.ஜி. மணி, சதாசிவம், வேலாயுதம், அன்பு, நகராட்சி கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.

    விழாவையொட்டி கிருபானந்த வாரியார் உருவப்படத்தற்கு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் அறக்கட்டளை பொருளாளர் முருகவேல், துணைத்தலைவர் கனேஷ், நிர்வாகிகள் சரவணன், சோமசுந்தரம், பாபு, பழனிசாமி, தவமணி, உதயபானு, சேகர், பூங்குன்றன், துரை உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று குமாரசாமிப்பேட்டை கிருபானந்த வாரியார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அங்குள்ள அவரது உருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×