என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ் குந்த்ரா"

    • நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா.
    • அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மும்பை :

    நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. தொழில் அதிபரான இவரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் போலீசார் ஆபாச பட வழக்கில் கைது செய்தனர். ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலி மூலம் வினியோகம் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ராஜ்குந்த்ரா மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில் ஆபாச படம் தயாரித்து வினியோகம் செய்த வழக்கில் இருந்து அவரை விடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆபாச படம் தயாரித்து வினியோகம் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் ராஜ்குந்த்ரா பணப் பலன் அல்லது வேறு எதுவும் பலன் அடைந்ததற்கான எந்த ஆதாரங்களும் போலீசார் கண்டறியவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ராஜ்குந்த்ரா மனு குறித்து அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ×