என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்ய கணபதி கோவில்"

    • கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஸ்திர ஹோமம் போன்ற யாகங்கள் நடைபெற்றது.
    • கோபுரத்தில் கலசங்கள் வைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    வீரபாண்டி :

    திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி வித்யாலயா தமிழ்நாடு சர்வதேச சங்க வளாகத்தில் அமைந்துள்ள வித்ய கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஸ்திர ஹோமம் போன்ற யாகங்கள் நடைபெற்றது. பின்பு கோபுரத்தில் கலசங்கள் வைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை ஆகம பிரவீண கயிலை மணி சிவசெந்தில் குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தினர்.

    கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு சர்வோதய சங்கத்தலைவர் டி.திருமலை நம்பி, செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் எஸ்.சரவணன், காந்தி வித்யாலயா முதல்வர் முத்து கண்மணி மற்றும் சர்வதேச சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×