என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதல் அமைச்சர்"
- உடலில் தோல் அடிக்கடி உரியும் வியாதி உள்ளது.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியும் பலனில்லை.
திருப்பூர் :
திருப்பூர் கருவம்பாளையத்தில் வசிப்பவர்கள் பிரேம்குமார் - ஜெயசித்ரா தம்பதி. இவர்களுக்கு பொன் குமரன் என்ற 8 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். பொன் குமரனுக்கு பிறந்தது முதலே உடலில் தோல் அடிக்கடி உரியும் வியாதி உள்ளது.நேற்று முன்தினம் திருமுருகன்பூண்டியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு வழங்க அவர் செல்லும் வழியில் பிரேம்குமார் நின்றிருந்தார். முதல்-அமைச்சரின் பாதுகாவலர்கள் மனுவை வாங்கி, முதல்-அமைச்சரிடம் வழங்கினர்.
மனுவில், என் மகனுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது.அரசு மற்றும் பல்வேறு அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியும் பலனில்லை. அவனை நாள் முழுக்க கவனிக்க வேண்டியுள்ளதால், எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையுள்ளது. மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வரும் எங்களின் நிலை உணர்ந்து, எங்கள் பிள்ளைக்கு சரியான மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறியிருந்தார்.
- கோவை நகரில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் சேர்கிறது.
- நொய்யல் ஆற்றின் ஓரம் உள்ள குளம், குட்டைகள் நீர் ஆதாரம் பெறும்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., தலைவர் செந்தில்வேல், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பஸ் நிலையத்திற்கு முன்னாள் நகர தந்தை பழனிசாமி கவுண்டர் பெயர் வைக்க வேண்டும்.பி.என்., ரோடு புது பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயரும், புதிதாக கட்டப்பட்டுள்ள டவுன்ஹால் மாநாட்டு அரங்கத்துக்கு, அந்த இடத்தை வழங்கிய ரங்கசாமி செட்டியார் பெயரும் வைக்க வேண்டும்.
சாமளாபுரம் பாசன நீர் மேலாண்மை பாதுகாப்பு குழுவினர் அளித்த மனுவில், கோவை நகரில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் சேர்கிறது.இதை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் ஆற்றில் திறந்து விட்டால், நொய்யல் ஆற்றின் ஓரம் உள்ள குளம், குட்டைகள் நீர் ஆதாரம் பெறும். சுற்றுப்பகுதி விவசாயிகள் நிலத்தடி நீர் ஆதாரம் பெறுவர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு மக்கள் மன்றம், பல்வேறு வகையில் நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலுக்கு மின் கட்டண உயர்வு மேலும் அவதியை ஏற்படுத்துகிறது.விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வு முடிவை திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
- தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா்
- 2011ம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளரும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.
திருப்பூர் :
தமிழக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுத் தொழிலாளா் நல அமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அந்த அமைப்பின் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழக மின்வாரியத்தில் கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா். இதனிடையே, ஆட்சி மாற்றம் காரணமாக 2011ம் ஆண்டில் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளரும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. இது தொடா்பாக எங்களது அமைப்பு சாா்பில் பல போராட்டங்களை நடத்தியும் கடந்த ஆட்சியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழக மின் வாரியத்தில் வயா்மேன், போா்மேன், பொறியாளா்கள், கள உதவியாளா்கள், கணக்கீட்டாளா்கள் என 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலிப்பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. ஆகவே, தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்