என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இபிஎஸ்"

    • விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.
    • தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    சேலத்தில் நேற்று காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பயா தலைமை உரையாற்றினார்.

    இந்நிலையில், விழாவில் பங்கேற் தம்பயாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முறையாக பள்ளிக்கு செல்லாமல், அதிமுக பணிகளில் ஈடுபட்டு வந்ததால் தொடக்க பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், தமிழக அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதிகள்படி தம்பயாவிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தம்பயா கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்

    இன்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.    

    சட்டசபை வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்.

    டங்ஸ்டன் சுரங்க ஏலம் கடந்த 9 மாதங்கள் முன்பே நடந்து முடிந்தது.  ஆனால் கடந்த 9 மாதமாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

    ஆரம்பத்திலேயே பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.  ஆனால் மழுப்பலான பதிலைத்தான் திமுக அரசு அளித்துக்கொண்டிருக்கிறது.

    அரசு அலட்சியமாக இருந்தது என எடுத்துக் கூறினால் அனைவர்க்கும் கோபம் வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

    • டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.
    • 10 மாதங்கள் மாநில அரசு அமைதியாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * டங்ஸ்டன் சுரங்கம் குறித்த முழு தகவல்களும் தீர்மானத்தில் இல்லை.

    * பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் செயல்பட்டிருக்க வேண்டும்.

    * தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை திமுக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    * மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

    * டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.

    * 10 மாதங்கள் மாநில அரசு அமைதியாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே, குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., போல் ஆவேசமாக மிமிக்ரி செய்து பேசினார். இது, ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    அப்போது இபிஎஸ் போன்று ஆக்ரோஷமாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ''எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உரக்கப்பேசுகிறார். நானும் பேசிவிடுவேன். ஏற்கனவே இந்த திட்டத்துக்கு எல்லா முயற்சியும் எடுத்து, மத்திய அரசுக்கு தெரிவித்த பிறகு தான் தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறோம்" என்றார்.

    அவரது பேச்சும், குரலும், ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    இதைக்கண்ட எதிர்க்கட்சித்தலைவர் இ.பி.எஸ்., ''பேரவை தலைவர் அவர்களே ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படி தான் பேசி ஆகணும். வேற என்ன பேச முடியும்? சரக்கு இருந்தால் தான பேச முடியும். இப்படி பேசினால் என்ன அர்த்தம். ஆ ஊன்னா என்ன? சட்டமன்றம் தான? மூத்த உறுப்பினர் மக்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஆ ஊன்னா என்ன? இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். மக்களுடைய பிரச்னை உயிரை கொடுத்தும் காப்பாத்துவோம்,'' என்றார்.

    • சட்டசபையில் திமுக, அதிமுக இடையே இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.
    • தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இதற்கிடையே, திமுக, அதிமுக இடையே இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. இறுதியில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக, மத்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில், திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டசபையில் இன்று இபிஎஸ் கடும் குற்றச்சாட்டை பதிவு செய்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக அம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது.

    கடந்த, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக எம்.பி. தம்பிதுரை, இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அவையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு தற்போது வெளிவந்துள்ளது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.

    சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்…

    தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
    • உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.

    NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் திரு. தம்பிதுரை அவர்கள் பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி

    தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை. இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக M.P-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

    உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை மு.க. ஸ்டாலின் 'X' வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
    • வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ஆம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    சிறுவன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி உள்ள நிலையில், புகார் அளித்த அன்றே தீவிரமாக காவல்துறை விசாரித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.

    விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    இது தான் சட்டம் ஒழுங்கை ஒரு முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா மு.க.ஸ்டாலின் ?

    சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
    • உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்

    திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் [டிசம்பர் 12] ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

    இது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    தீ விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரித்துள்ளார்.

    • டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    கனமழையின் காரணமாக அப்பகுதிகளில் ஓடும் ஆறுகள் மற்றும் சிற்றாறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கிறது. ஆற்றின் கரைகள் பல இடங்களில் பலவீனமாக இருப்பதால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    எனவே, வருவாய் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆற்றங்கரை ஓரங்களிலும், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் பலவீனமான கரைப் பகுதிகளைக் கண்டறிந்து, உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி அவற்றை பலப்படுத்துவதுடன், கனமழையால் ஆறு, ஏரி. வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வழிப் பாதைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன்.

    மேலும், அரசு அதிகாரிகள் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணிரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரு நாட்களாகப் பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள நீரை கனரக மோட்டார்களை வைத்து வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.

    கடந்த வாரம் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ள நீரால் பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்குமாறு ஏற்கெனவே திமுக அரசை வலியுறுத்தி இருந்தேன். பல இடங்களில் நிவாரணங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    எனவே, அரசின் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.
    • தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார்.

    இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 8 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் விசாரணையில், மனு தாரர்கள், எதிர் மனு தாரர்கள், அவர்களுடைய பதில், ஆட்சேபனைகள் இருந்தால் அனைத்தையும் வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.

    அதற்கு ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் தெரிவித்த பிறகு இதுகுறித்து விசாரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சூரிய மூர்த்தியின் மனுவின் மீது இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்தில், எதிர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவின் நகல் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு கால அவகாசமும் கோரப்பட்டிருக்கிறது.

    அதிமுகவில் பிரிவு எதுவும் கிடையாது, இபிஎஸ் தலைமையில் இருப்பதுதான் அதிமுக.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனிம சுரங்க விவகாரத்தில் ஏல நடைமுறை திட்டம் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என கடிதத்தில் குறிப்பிட்டேன்.
    • டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அக்டோபரிலேயே மத்திய அரசுக்கு கடிதம்.

    டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

    துரைமுருகன் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * கனிம சுரங்க விவகாரத்தில் ஏல நடைமுறை திட்டம் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என கடிதத்தில் குறிப்பிட்டேன்.

    * டஸ்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அக்டோபரிலேயே மத்திய அரசுக்கு கடிதம்.

    * அரிட்டாப்பட்டி உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரிய தளம் என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

    * அமைச்சகத்தால் ஏலம் மட்டுமே விட முடியும், குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

    * மாநில அரசின் ஆட்சேபனையை மீறி மத்திய அரசு ஏலம் மேற்கொண்ட விவகாரத்தை முதல்வர் பிரதமரிடம் கொண்டு சென்றார்.

    * பிரதமரிடம் விவகாரம் கொண்டு செல்லப்பட்டதால் அரிட்டாப்பட்டியில் சுரங்கம் அமைக்கும் முடிவை அமைச்சகம் மறுஆய்வு செய்ய முடிவு.

    * மறுஆய்வு செய்ய முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    * ஆயிரக்கணக்கான மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

    • கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளார்.
    • ஞானசேகரன் போனில் சார் சார் என பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை தற்போது வரை காவல்துறை வெளிக்கொண்டு வரவில்லை.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஞானசேகருக்கு தி.மு.க. பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டு ஆதாரமாக படங்களையும் வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருடமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

    * பல்கலைக்கழகத்தில் உள்ள 70 சிசிடிவியில் 56 தான் வேலை செய்கிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.

    * தமிழகம் முழுவதும் இருந்து படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    * ஞானசேகரன் போனில் சார் சார் என பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை தற்போது வரை காவல்துறை வெளிக்கொண்டு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

    * FIR வெளிவந்த விவகாரத்தில் உண்மையை மறைக்கின்றனர்.

    * தமிழகத்தில் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுகிறார்கள். காவல்துறைக்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை.

    * அமைச்சர் மற்றும் காவல் ஆணையரின் கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

    * கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளார்.

    * அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.

    * ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காப்பாற்ற முயற்சியா?

    * அரசின் இது போன்ற செயல்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது.

    * பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதுதான் அரசின் கடமை. ஆனால் அரசு சிபிஐ விசாரிக்க கூடாது என மேல்முறையீடு செய்கிறது.

    • முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானதையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
    • சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக அரசை கண்டித்து கன்டன ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்தும்;

    சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வரும் 30.12.2024 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த 23.12.2024 அன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், ``பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து", அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள், முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானதையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள், வருகின்ற 30.12.2024 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்கள் நீங்கலாக, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும்.

    விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    பெண்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×