என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவில்"
- நாளை முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.
- அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கணபதி ஹோமத்துடன் ஹோம மஹோற்சவம் தொடங்கியது.
அதையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் திருமஞ்சனம் நடந்தது. மாலை கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், வாஸ்துபூஜை, பர்யாக்னிகரணம், மிருதசங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கலச ஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, கணபதி ஹோமம், லகு பூர்ணாஹூதி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) கணபதி ஹோமம் நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது. 30-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், நவம்பர் மாதம் 1-ந்தேதி கால பைரவர் ஹோமம், 2-ந்தேதி நவக்கிரஹ ஹோமம், 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டியாகம்), 12-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்) நடக்கிறது. 22-ந்தேதி சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது. 23-ந்தேதி சண்டிகேஸ்வரர் ஹோமம், திரிசூல ஸ்நானம், பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடக்கிறது.
அனைத்துப் பக்தர்களும் ஹோமத்தில் பங்கேற்று வழிபடலாம். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக புனித கபில தீர்த்தத்தில் நீராடி கபிலேஸ்வரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்று வழிபட்டால் பாவம் விலகி புண்ணிய பலன் கிடைக்கும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று கணபதி ஹோமம் நிறைவடைந்தது.
முன்னதாக காலை 8 மணியில் இருந்து காலை 11 மணிவரை யாக சாலையில் கணபதி பூஜை, நித்யஹோமம், மகா பூர்ணாஹுதி, கணபதி கலச உத்வாசனம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.
மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சுப்பிரமணியசாமிக்கு கலச ஸ்தாபனம், லகு பூர்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- சுப்பிரமணியசாமி ஹோமம் நாளை வரை நடக்கிறது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று சுப்பிரமணியசாமி ஹோமம் தொடங்கியது. நேற்று நடந்த சுப்பிரமணியசாமி ஹோம மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக யாகசாலையில் காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரை சிறப்புப்பூஜை, ஹோமம், லகுபூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை ஹோமம், சஹஸ்ரநார்ச்சனை, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஹோமம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நாளை மாலை 5:30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
- தட்சிணாமூர்த்திக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
- இன்று கால பைரவர் ஹோமம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதையொட்டி 28-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் சுப்பிரமணியசாமி ஹோமமும், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சுப்பிரமணியசாமி திருக்கல்யாணமும் நடந்தது.
அதைதொடர்ந்து நேற்று தட்சிணாமூர்த்தி ஹோமம் நடந்தது. யாகசாலையில் காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரை தட்சிணாமூர்த்தி ஹோமம், பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், தட்சிணாமூர்த்தி கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணியளவில் தட்சிணாமூர்த்திக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
அதில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு மேல்துண்டு, ஜாக்கெட், அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) கால பைரவர் ஹோமம் நடக்கிறது.
- காமாட்சியம்மனுக்கு கலச ஸ்தாபனம், சிறப்பு தீப ஆராதனை நடந்தது.
- இன்று முதல் 11-ந்தேதி வரை சண்டி யாகம்நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கால பைரவர் ஹோமமும், நேற்று நவகிரக ஹோமமும் நடந்தது. அதையொட்டி காலை யாகசாலையில் நவக்கிரகஹோமம், பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், நவக்கிரக கலசாபிஷேகம் நடந்தது. மாலை காமாட்சியம்மனுக்கு கலச ஸ்தாபனம் மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடந்தது.
ஹோம மஹோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசுலு, கண்காணிப்பாளர்கள் பூபதி, சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் பாலகிருஷ்ணா மற்றும் அர்ச்சகர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடக்கிறது.
- சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
- சண்டியாகம் வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று காமாட்சி ஹோமம் எனப்படும் சண்டியாகம் தொடங்கியது. நேற்று காலை யாக சாலையில் உற்சவர் காமாட்சி தாயாரை எழுந்தருள செய்தனர். தாயார் முன்னிலையில் சிறப்புப்பூஜைகள், நித்ய ஹோமம், சண்டிஹோமம், லகுபூர்ணாஹுதி, நிவேதனம் நடந்தது. சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
மாலை ஹோமம், சண்டிபாராயணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சண்டியாகம் வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது.
- 8-ந்தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.
- 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 8-ந்தேதி தெலுங்கு கார்த்திகை பவுர்ணமி உற்சவம் நடக்கிறது. அன்றே கோவிலில் அன்னாபிஷேகமும் நடக்கிறது. 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது. இதனால் 8-ந்தேதி காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணிநேரம் கபிலேஸ்வரர் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன.
முன்னதாக 8-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து அதிகாலை 3.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அபிஷேகம், அதிகாலை 3.30 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை பக்தர்களுக்கு அன்னலிங்க தரிசனம், காலை 7.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னலிங்க உத்வாசனம் நடக்கிறது. அதன்பிறகு கோவில் சுத்தம் செய்யப்பட்டு காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஏகாந்தமாக சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சந்திர கிரகணத்தால் 11 மணிநேரம் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன. இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.
அதன்பிறகு பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அபிஷேகம், இரவு 8.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அலங்காரம், சஹஸ்ரநார்ச்சனை, நிவேதனம், தீபாராதனை, இரவு 10 மணியில் இருந்து இரவு 10.15 மணி வரை ஏகாந்த சேவை நடக்கிறது.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- திருப்பதியில் உள்ளது கபிலேஸ்வரர் கோவில்.
- உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை சேவை நடக்கிறது. மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இன்று முதல் 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
- கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் நடந்து வந்தது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து கார்த்திகை ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடந்து வந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி யாகசாலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரை சண்டி ஹோம சமாப்தி, மகாபூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், மூலவர் காமாட்சி தாயாருக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கபிலேஸ்வரருக்கு கலச ஸ்தாபனம், பூஜை, ஜெபம், ஹோமம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.
ஹோமத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசலு, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் எனப்படும் ருத்ர யாகம் நடக்கிறது.
- திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது.
- இன்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது. 11 நாட்கள் நடைபெறும் இந்த ருத்ர யாகம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக காலையில் மூலவர் கபிலேஸ்வர சுவாமிக்கு ருத்ரயாகம் சமாப்தி, மஹாபூர்ணாஹுதி, மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது.
இன்று (புதன் கிழமை) சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
- நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது.
- பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. முதலில் கணபதி ஹோமம், சுப்பிரமணியசாமி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், பைரவர் ஹோமம், நவக்கிரக ஹோமம், காமாட்சி ஹோமம், கபிலேஸ்வரர் ஹோமம் நடந்து வந்தது.
நிறைவு நாளான நேற்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது. பின்னர் மகா பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம், திரிசூல ஸ்நானம், அங்குரார்ப்பணம் நடந்தது. மாலை லட்சதீப ஆராதனை, பஞ்சமூர்த்திகளான விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரருக்கு ஆராதனை, அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது. இத்துடன் ஒரு மாதம் நடந்த ஹோம மஹோற்சவம் முடிந்தது.
- தெப்போற்சவம் 5-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
- மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. தெப்போற்சவத்தின் முதல் நாளான ஜனவரி 1-ந்தேதி விநாயகர், சந்திரசேகரர், 2-ந்தேதி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், 3-ந்தேதி சோமஸ்கந்தமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
4-ந்தேதி காமாட்சியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5-ந்தேதி சண்டிகேஸ்வரர் மற்றும் சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேற்கண்ட 5 நாட்களில் மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது. தெப்போற்சவத்தையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சாரியார் திட்டத்தின் கீழ் தினமும் பக்தி கீர்த்தனைகள் பாடப்படுகிறது.
மேலும் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன மகோற்சவத்தையொட்டி ஜனவரி 6-ந்தேதி காலை 5.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.