என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வேலைவாய்ப்பு"

    • கள்ளக்குறிச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
    • கலந்து கொள்ள இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்வரன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை தனி யார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

    தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார் துறை நிறுவனங்கள் அவ்வப்பொழுது கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால் இம்முகாமிற்கு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ள இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது. எனவே இவ்வேலை வாய்ப்பு முகாமிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞ ர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகிற 16- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள டேனிஷ் மிஷன் நகர தொடக்க ப்பள்ளியில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • திருப்பூர் வட்டாரங்களில் உள்ள இளைஞர்களுக்கு அக்டோபர் 8-ந்தேதி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது

    திருப்பூர் :

    மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வெள்ளக்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இன்று தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வருகிற 2-ந்தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி குடிமங்கலம் என்.வி., பாலிடெக்னிக் கல்லூரியிலும், 7-ந் தேதி உடுமலை மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. ஊத்துக்குளி மற்றும் அவிநாசி பகுதி இளைஞர்களுக்கு 17-ந் தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அக்டோபர் 1-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பல்லடம், பொங்கலூர் திருப்பூர் வட்டாரங்களில் உள்ள இளைஞர்களுக்கு அக்டோபர் 8-ந்தேதி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது

    இதில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், விற்பனை நிறுவனங்கள், பழுதுபார்ப்பு நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள், மருந்து விற்பனை நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனம், நிதி நிறுவனம் என பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×