search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை ஏற்றுமதி"

    • டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.
    • டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர்.

    திருப்பூர்:

    டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகி உள்ளதால் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2-வது முறையாக மீண்டும் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.

    டிரம்ப்பின் சீன எதிர்ப்பு கொள்கை, நம் பிரதமருடன் அவர் கொண்டுள்ள நட்பு , பைடன் காலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள வரியில்லாத வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை உயிர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளிட்ட காரணங்கள் திருப்பூர் பின்னலாடைத்துறைக்கும் சாதகமானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தொழில் துறையினரிடம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து பின்னலாடை துறை ஆலோசகர் சபரி கிரீஷ் கூறியதாவது:-

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை விட, குடியரசு கட்சி ஆட்சி அமையும்போது அண்டை நாடுகளுடன் இணக்கமான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. டிரம்ப்பை பொறுத்தவரை போரை விரும்பாதவர்.

    உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனால் உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போர் நின்றால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பெறும். ஐரோப்பாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சி பெறும்.

    சீன எதிர்ப்பு கொள்கை கொண்டவர் டிரம்ப். ஏற்கனவே இவரது பதவி காலத்தில்தான், சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. ஜோ பைடன் ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வார்த்தை டிரம்ப்பின் வருகையால் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

    டாலருக்கு மாற்றாக பொதுவான கரன்சியை கொண்டு வர இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதனால் டாலர் ஸ்திரத்தன்மை இழப்பதை டிரம்ப் விரும்பமாட்டார். இந்தியாவில் சில அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க அழுத்தம் கொடுப்பார். இது போன்ற ஒரு சில பாதகங்களும் உள்ளன.

    சாதக, பாதகங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் டிரம்ப்பின் வெற்றி இந்தியாவுக்கு நன்மை தருவதாகவே அமையும். நம் நாட்டுடன் குறிப்பாக பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு கொண்டுள்ளார். அதனால் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுக்கு பாதகமான அம்சங்கள் விலகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது.
    • திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது. புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

    இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் ரூ.12 ஆயிரத்து 248 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதுபோல் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.11 ஆயிரத்து 917 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. 2024 மார்ச் மாதம் ரூ.12 ஆயிரத்து 224 கோடியாக வர்த்தகம் உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்றும் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
    • தீ விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூா் வீரபாண்டியை அடுத்த பலவஞ்சி பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து பல அடி தொலைவுக்கு கரும்புகை எழுந்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவா்கள் திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள், எந்திரங்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
    • இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    திருப்பூர் :

    இ.சி.ஜி.சி., எனப்படும் ஏற்றுமதி காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:-சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாவட்டமாக அந்தஸ்து பெற்றுள்ளது.நாட்டின் பின்னலாடை நகராகவும் மாறியுள்ளது.

    தமிழகத்தின் ஏற்றுமதியில், மூன்றாமிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சியே இதற்கு காரணம்.தொழிலாளராக பணியில் இணைவோர், ஆடை உற்பத்தி நுட்பங்களை கற்றறிந்து, எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறுகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி, அனைத்து நுணுக்கங்களையும் நன்கு தெரிந்துவைத்துள்ளனர்; ஆனால் ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, இ.சி.ஜி.சி., போன்ற காப்பீடு அவற்றின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

    இ.சி.ஜி.சி., சார்பில் மாதம் ஒரு குறைகேட்பு கூட்டம் நடத்தி ஏற்றுமதியாளர் பிரச்னைகளை கேட்டறியவேண்டும். காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இ.சி.ஜி.சி., தென்மண்டல துணை பொதுமேலாளர் சுபாஷ்சாகர் பேசியதாவது:- ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பொருட்களுக்கான தொகை, பல்வேறு காரணங்களால், குறித்த நாட்களுக்குள் வர்த்தகர்களிடமிருந்து கிடைக்காமல் போகவாய்ப்பு உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழல்களில், ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது, இ.சி.ஜி.சி., காப்பீடு.உலக அளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் குறித்த முழு விவரங்கள் இ.சி.ஜி.சி., வசம் உள்ளது. குறிப்பிட்ட ஒரு வர்த்தகர் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும்பட்சத்தில், அவ்விவரங்கள் இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    இ.சி.ஜி.சி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காப்பீடு சார்ந்த குறைகள், சிக்கல்களை கண்டறிந்து களையும் வகையிலும், ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இணைந்து மாதம்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தங்கள் அனைத்து ஆர்டர்களுக்கும், இ.சி.ஜி.சி.,ன் காப்பீடு மூலம் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

    வர்த்தகரிடமிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகை கிடைக்காவிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். உரிய ஆவணங்களுடன் அணுகினால் வர்த்தகரிடமிருந்து கிடைக்கவேண்டிய தொகை, இ.சி.ஜி.சி., மூலம் சுலபமாக கிடைத்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.இ.சி.ஜி.சி., முடிவில் திருப்பூர் கிளை மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று காப்பீடு சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    ×