என் மலர்
நீங்கள் தேடியது "4 கோடி பணம் பறிமுதல்"
- ரூ.4 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
- இயந்திரங்கள் மூலம் பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் சஞ்சய் குமார் ராய் மற்றும் அவருக்கு கீழ் பணி புரியும் இரண்டு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. பாட்னா மற்றும் கிஷன்கஞ்ச் பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையின் போது கட்டுக்கட்டாக லஞ்சப்பணம் சிக்கியது.
பணம் எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எண்ணி பார்த்தபோது மொத்தமாக 4 கோடிக்கும் அதிகமாக பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் பல ஆவணங்கள் மற்றும் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்னா லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுஜித் சாகர் தெரிவித்துள்ளார். அரசு உயர் அதிகாரிகள் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.