என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம் நோட்டீஸ்"
- வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனப்படும் மத அடையாள ஆடைகளை அணிந்து செல்வதற்கு மாநில அரசு தடை விதித்தது. இந்த தடையை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உப்பினங்கடி கல்லூரியில் தடையை மீறி ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளிக்கக் கோரி கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.